சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறையன்புவை.. டக்கென திரும்பி பார்த்த மோடி.. பயங்கர நெருக்கம்.. தனியாக சந்தித்து பேசி.. பின்னணி என்ன?

இறையன்பு ஐஏஎஸ், பிரதமர் மோடிக்கு ஐடியா ஒன்று தந்தாராம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், பிரதமர் மோடியுடன் தனியாக சந்தித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.. என்ன காரணம்?

Recommended Video

    ஒரே வீட்டில் இரண்டு IAS அதிகாரிகள் | Irai Anbu IAS Unknown Facts

    ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதுமே, தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்தார்.. இந்த அதிரடி அப்போதே தமிழகத்தின் பெருவாரியான பாராட்டை பெற்று தந்தது.

    அதற்கேற்றபடி, இறையன்பு ஐஏஎஸ், பதவியேற்றது முதலே ஒவ்வொன்றையும் சீரிய கவனத்துடன், அக்கறை காட்டி, சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    பிரதமர் மோடி 'படிக்காத மேதை'.. திரும்ப கிளறி விட்டுட்டாரே அண்ணாமலை.. அந்த டிகிரி எல்லாம் பொய்யா!? பிரதமர் மோடி 'படிக்காத மேதை'.. திரும்ப கிளறி விட்டுட்டாரே அண்ணாமலை.. அந்த டிகிரி எல்லாம் பொய்யா!?

    தர்மசாலா

    தர்மசாலா

    இறையன்பு குறித்து, மாநிலத்தின் நலம் சார்ந்த விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும், தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது, இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. குறிப்பாக பிரதமர் மோடியின் நன்மதிப்பையும் இறையன்பு பெற்றுள்ளதாக தெரிகிறது.. அதாவது, பிரதமர் மோடி தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்ற முதல் தேசிய மாநாடு இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் சமீபத்தில் நடந்தது.

     அட்வைஸ் தந்த மோடி

    அட்வைஸ் தந்த மோடி

    இந்த மாநாட்டில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.. அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தந்தார்.. காரணம், ஒரு மாநிலம் முன்னோக்கி செல்வதில் அச்சாணியாக இருப்பதே, அம்மாநிலத்தின் தலைமை செயலாளர்கள்தான் என்பதை மறுக்க முடியாது.

     ரிப்போர்ட் என்ன?

    ரிப்போர்ட் என்ன?

    அந்த வகையில் நம்முடைய தலைமை செயலாளரும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.. அப்போது, உடன் பிரதமர் மோடி, இறையன்புவுடன் தனியாகவே பேசியதாக கூறப்படுகிறது.. முக்கியமாக, தமிழக வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, பிரதமரிடம் இறையன்பு நீண்ட நேரம் எடுத்துரைத்தாராம்.. அது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அவரிடம் சமர்ப்பித்தாராம்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில், ஸ்ரீபெரும்புதுாருக்கு அருகே இரண்டாவது விமான தளம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டதாம்...

     சூப்பர் யோசனை

    சூப்பர் யோசனை

    இந்த 2வது விமான நிலையத்தை சென்னையிலிருந்து மெட்ரோ ரயில் மூலம் இணைக்கலாம் என்று இறையன்பு ஆலோசனை சொன்னதாக தெரிகிறது. அதை கேட்டதும் ஆச்சரியப்பட்ட மோடி, "நல்ல யோசனையாக இருக்கிறதே" என்று பாராட்டியிருக்கிறார்.. மேலும், இதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்று கேட்க, அதற்கு இறையன்பு, 8,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் என்றும் சொன்னதாக தெரிகிறது. இதற்கு, வரும் 2023- - 24 மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றன..

    நெருக்கம்

    நெருக்கம்

    இறையன்புவுடன் பிரதமர் இந்த அளவுக்கு நெருக்கமாக பேச இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பிரதமருக்கு இறையன்பு மீது தனி பாசம் என்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்... காரணம், இவருடைய சகோதரர் திருப்புகழ், ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.. இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்றாலும், பிரதமர் மோடி, அன்று குஜராத் முதல்வராக இருந்தபோது, அவருடன் திருப்புகழ் பணிபுரிந்துள்ளார்... அப்போதே நெருக்கமாக இருந்துள்ளார்..

     வித்து

    வித்து

    இதைதவிர, தற்போது தமிழகத்தின் தலைமை செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து, இறையன்பு செய்து வரும், சிறப்பான பணிகளையும், பிரதமர் நன்கு அறிந்து வைத்துள்ளாராம்.. எப்படியோ, இரு தரப்பிலும், தனிப்பட்ட நன்மதிப்பும் நெருக்கமும் ஒருபக்கம் இருந்தாலும், தமிழக நலனுக்கு அத்தகைய நெருக்கமானது, "சத்தான வித்தாக" அமைய போவது, மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது..!

    English summary
    chief secretary irai anbu ias gave an idea to pm modi about chennais second airport இறையன்பு ஐஏஎஸ், பிரதமர் மோடிக்கு ஐடியா ஒன்று தந்தாராம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X