அந்த மனசு தான் கடவுள்.. சென்னையில் விபத்தில் சிக்கி துடிதுடித்த இளைஞர்..காரை நிறுத்தி உதவிய இறையன்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று காலை விபத்தில் சிக்கி சாலையில் தவித்து கொண்டிருந்த இளைஞருக்கு தலைமை செயலாளர் இறையன்பு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக Peak Hoursல் சாலையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த நேரங்களில் அலுவலகம், கல்லூரி, பள்ளி என பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் அவசரஅவசரமாக மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

சென்னையில் விபத்து

சென்னையில் விபத்து


இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் அருகே ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. எதிர்பாராத விதமாக பைக்கும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் பைக்கில் பயணித்த இளைஞரின் காலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் நடக்க முடியாமல் சாலையில் இருந்தபடி அலறி துடித்தார்.

 இறையன்பு ஆறுதல்

இறையன்பு ஆறுதல்

இந்த வேளையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று காலை சுமார் 9.15 மணிக்கு சென்னை நேப்பியர் பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். விபத்தில் சிக்கி போராடி கொண்டிருப்பவை பார்த்த அவர் தனது காரை நிறுத்தும்படி கூறினார். அதன்பிறகு காரில் இருந்து இறங்கி வந்த இறையன்பு அந்த நபருக்கு ஆறுதல் கூறி அவர் பதற்றமடையாமல் இருக்கும்படி கூறினார்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

மேலும் அவரது விபரங்களை அறிந்து கொண்ட இறையன்பு உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தார். அதன்பிறகு அந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணையை துவங்கினர்.

யார் இந்த நபர்?

யார் இந்த நபர்?

இதுபற்றி விசாரணையில் விபத்தில் சிக்கிய நபர் காயமடைந்த நபர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த குமரேசன் (வயது 34) என்பதும், இவர் பணி நிமித்தமாக பூக்கடை நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ பற்றிய விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய நபருக்கு தலைமை செயலாளர் உதவி செய்ததற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+