Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சினிமாவில் நடிக்கப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர். அத்துடன் குழந்தையை கடத்திய பெண்ணையும் கைது அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருபவர்கள் ஜானே போஸ்லே- ரந்தோஷ் தம்பதி. மகாராஷ்டிராவில் பஞ்சம் பிழைக்க சென்னை இந்த தம்பதிக்கு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளான்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு ஜானே போஸ்லே- ரந்தோஷ் தம்பதியை அழைத்துச் சென்றுள்ளார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

அங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக்கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, குழந்தையை அந்த பெண் தூக்கிக்கொண்டு மாயமானர்.. நீண்ட நேரம் ஆகியும் வராததால் ஏமாற்றப்பட்டதை அந்த தம்பதி தாமதமாக உணர்ந்திரக்கிறார்கள். இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்திருக்கிறார்கள்.

தனிப்படை அமைப்பு

தனிப்படை அமைப்பு

வழக்கு பதிவு செய்த போலீசார் விரைந்து செயல்பட்டர். சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது குழந்தையை அப்பெண் கடத்திச் செல்வது தெரிந்தது. இதையடுத்து பூக்கடை காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டார்கள். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த பெண் செல்லும் வழி முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார்கள்.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

அதில் அந்தப் பெண், குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் வரை செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

போலீசார் காத்திருந்தனர்

போலீசார் காத்திருந்தனர்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, அந்த பெண் கடத்திய குழந்தையுடன் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் கிடைத்தது. அதனை வைத்து போலீசார் அங்கேயே காத்திருந்தனர். இன்று அந்த பெண் கடத்திய குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் வந்துபோது மடக்கி பிடித்தனர். அத்துடன் குழந்தையை பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பெண்ணையும் போலீசார் கைது செய்தார்கள்.

குழந்தை மீட்பு

குழந்தை மீட்பு

குழந்தையை கடத்திய பெண் யார் என்பது குறித்த விவரங்களை, விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக போலீசார் அறிவித்துள்ளார்கள். . தன்னுடைய குழந்தைதான் என்று பெற்றோரும் கடத்தப்பட்ட குழந்தையை அடையாளம் காட்டினர். இதனிடையே குழந்தையை கடத்திய பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+