2ஆவது மாடி பால்கனியில் வேடிக்கை பார்த்த பரத்!.. அதன் பின்னர் நடந்தது என்ன தெரியுமா?
Recommended Video

சென்னை: சென்னை தி.நகரில் 2-ஆவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரின் மகாராஜபுரம் சந்தான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. 4 மாடிகள் கொண்ட குடியிருப்பில் 2-ஆவது தளத்தில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனால் இவர் பெரும்பாலான நாட்கள் ஆரணியில் தங்கியிருப்பது வழக்கம்.
இவரது மனைவி பரிமளா. இவர் பிரபல துணிக் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பரத் என்ற மகன் உள்ளார். சம்பவம் நடந்த அன்று குழந்தை பரத் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது பால்கனி இடைவெளியில் பரத் விழுந்துவிட்டான். இது குறித்து பரிமளாவுக்கு தெரியாது. பின்னர் குழந்தை மாடியிலிருந்து சாலையில் விழுவதை ஒருவர் கண்டார். அவர் ஓடிவந்து குழந்தையை தூக்கினார்.
அப்போது குழந்தையின் தலையில் ரத்தம் வழிந்தது. வலியால் குழந்தை தவித்தது. இந்த சப்தம் கேட்டு ஏதோ குழந்தை அழுகிறது என நினைத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க பால்கனிக்கு வந்துள்ளார் பரிமளா. அப்போதுதான் பரத் அங்கு காணாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.
பால்கனியில் எட்டி பார்த்தபோது அங்கு அழுது கொண்டிருந்த குழந்தை பரத் தான் என்பதை அறிந்த பரிமளா ஓடிசென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார்.
இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரத் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தலையில் ஏற்பட்ட காயத்தை தவிர்த்து வேறு எங்கும் காயம் இல்லை. யாரோ இரண்டு பேரால் குழந்தை எந்தவித காயமின்றி உயிர் பிழைத்ததை அடுத்து பரிமளா அந்த இருவருக்கும் நன்றி கூறினார்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications