சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக் ஏரியில் சீனா பாலம் கட்டவில்லை.. தமிழக பாஜக கூறும் விளக்கம்!

By
Google Oneindia Tamil News

சென்னை: லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா பாலம் கட்டுவதாக செயற்கைகோள் புகைப்படத்துடன் தகவல் வெளியானநிலையில், பா.ஜ.க அதை மறுத்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இருக்கிறது பாங்காங் ஏரி. சீன எல்லைக்குள் வரும் பாங்காங் ஏரியின் ஒரு பகுதியின் குறுக்கே சீன ராணுவம் பாலம் கட்டுவதாகவும், ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் விதமாக பாலம்உருவாக்கப்படுகிறது எனவும் புவி உளவுத்துறை நிபுணர் டேமியன் சைமன் தெரிவித்திருக்கிறார். செயற்கைக்கோள் படங்கள் உதவியுடன் இந்த செய்தியை அவர் தன்னுடைய‌ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த பாலம் கட்டப்பட்டால், கனரக ஆயுதங்கள் முதல் ராணுவ வீரர்கள் வரை விரைவாக இடம்பெயர்க்கும் திறனை பாலத்தின் உதவியால் சீனாவால் ஏற்படுத்த முடியும்.

China does not build a bridge over Ladakh Pangong Lake - BJP Explains

2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து, இரு நாடுகளும் எல்லை நெடுகிலும் படைகளைக் குவித்து வைத்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2021-ல் பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள மலைகளிலிருந்து பீரங்கிகள், கவச வாகனங்களுடன் நிலை கொண்டிருந்த படையினரை இரு நாடுகளும் பகுதி அளவில் திரும்பப் பெற்றன.

லடாக் ஏரியில் சீனா பாலம் கட்டுவது போன்ற செயற்கைகோள் புகைப்படம் வெளியானதும் மத்திய அரசை எதிர்கட்சிகள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பான்காங் த்சோ உள்ளிட்ட அக்சாய் சின் முழுவதிலும் சாலைகள், பாலங்களை சீனா கட்டி எழுப்பி வருவதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சீனா கட்டியுள்ள பாலம் பான்காங் ஏரியின் இருபுறமும் இணைக்கிறது. சீன வீரர்கள் மற்றும் தளவாடங்கள் அங்கு செல்வதற்கு பல வழிகள் திறக்கப்படும். இப்போதும் மோடி அரசு ஏன் இப்படி எதுவும் செய்யாமல் இருக்கிறது?" என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த் சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த்

''இந்திய வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து கொடியேற்றி காண்பித்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சீனா அப்படியொரு பாலத்தை அங்கு கட்டவேயில்லை. இவை வெறும் ஒரு வதந்தி!" என காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருப்பதி நாராயணன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

English summary
The BJP has denied reports that China is building a bridge across Lake Pangong in Ladakh, with a satellite photo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X