சீண்டும் சீனா.. "பொருள் புறக்கணிப்பு" எளிதானதா.. உண்மையிலேயே என்ன செய்ய வேண்டும் இந்தியா?!
சீன பொருட்களை புறக்கணிப்பது என்பது சாத்தியமா?
சென்னை: சீனா - இந்தியா உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், சீன பொருட்களை நாம் முற்றிலுமாக புறக்கணிப்பது என்பது சாத்தியமா? இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவும், சந்தேகமுமாகவும் எழுந்துள்ளது.
Recommended Video
நம் வீரர்களின் கொடூர மரணம், இனி யாருமே சீன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று ஆவேச முடிவை எடுக்க வைத்துள்ளது.
நாட்டு பற்றுடன் இந்த முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுத்துள்ளோமே தவிர, இது நடைமுறையில் சாத்தியமாக கூடியதா என்பதையும் யோசித்து பார்க்க வேண்டி உள்ளது.

உதிரிபாகங்கள்
காரணம், சாதாரணமாக நம்மில் முக்கால்வாசிப் பேர் உபயோகப்படுத்தும் செல்போனே சீன தொழில்நட்பத்தில் தயாரானதுதான்.. அந்த செல்போனின் முக்கிய ஆப் டிக்டாக்கும் அதே சீனாவினுடையதுதான்.. நம் வீடுகளில் உபயோகிக்கும் முக்கால்வாசி பொருட்களும் சீனாவின் கைவண்ணமே.. தலைவலி மாத்திரை முதல் குழந்தைகள் விளையாடும் பொம்மை வரை.. ஏன் கொசு அடிக்கும் பேட் வரை சீனாவின் முகம் அப்பட்டமாக பளிச்சிடுகிறது!

சீன பொருட்கள்
இரு நாடுகளுக்கும் இப்படி உறவில் விரிசல் வரும் என்று நமக்கு ஆரூடம் தெரியாது.. எல்லை பிரச்சனை அன்றிலிருந்தே இழுத்து வந்தாலும், சீன பொருட்களின் மீதான மோகம் குறையாமல் இருந்து வந்தது.. கடந்த வருடம்தான் சீன பொருட்களை உபயோகிக்க கூடாது என்று ஒரு எண்ணமே நமக்கு அதிகமாக வந்தது.. அப்போதும் முழுமையாக புறக்கணிக்க இயலவில்லை.. சீனாவைப் புறக்கணிப்பது எளிதல்ல.. ஏனென்றால் நம்ம ஊர் சந்தை மொத்தமாக சீன கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சுய சார்பு பொருளாதாரம் என்பது நம்மிடம் இல்லை.

உற்பத்தி
கச்சா எண்ணெயயை நாம் அதிகமாக இறக்குமதி செய்வதே சீனாவிடமிருந்துதான். சீனாவை பொறுத்தவரை தெளிவாக உள்ளது.. உள்ளூரில் உற்பத்தி.. வெளிநாடுகளில் விற்பனை என்று சந்தையை விரிவுபடுத்தி கடை விரித்துவிட்டது.. சீனாவிடம் எல்லா வகையான பொருளும் உள்ளூரிலேயே உற்பத்தியாகிறது. நாம் அப்படி இல்லை. இந்த மாதிரி நம்மால் இந்தியாவை உயர்த்த முடியமா என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒருவேளை சீனாவிடம் இருந்து இறக்குமதியை குறைத்தாலும், அமெரிக்காவிடமிருந்து பொருட்களை வாங்குவோமே தவிர சுய சார்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு நம்மிடம் இன்னும் முழுமையாக வரவில்லை.

பொம்மைகள்
ஸ்மார்ட் போன்கள், தொலை தொடர்பு உபகரணங்கள், டிவி உட்பட வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், எஃகு பொருட்கள் என அந்நாட்டு இறக்குமதிகளை உடனடியாக கைவிட முடியுமா? சிவகாசி பட்டாசுகளை தடை செய்து விட்டு சீனப் பட்டாசுகளை அதிகம் பயன்படுத்தலாம்னு சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு போடப்பட்டது... அதில் எந்த அரசும் அந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னமும்கூட சீனப் பட்டாசுக்கு வக்காலத்து வாங்குவோரும், சிவகாசி பட்டாசை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டுவோரும் வடக்கில் அதிகமாகவே உள்ளனர். பட்டாசுக்கே இந்த நிலை என்றால், உதிரிபாகங்கள், மருந்து பொருட்களுக்கான தற்சார்பு கிடைக்குமா?

சீமான்
சீமான் ஒருமுறை சொன்னாரே, தக்காளி, வெங்காயம் எல்லாமே இம்போர்ட் பண்ண வேண்டிய நிலைமை வந்துடும்.. தற்சார்பு எங்கே? என்று அவர் கேட்டது நியாயமான கேள்வியே! ஒருவேளை சீன பொருட்களை புறக்கணித்தால், அங்கிருக்கும் தொழில்நிறுவனங்களை சார்ந்திருக்கும் பெருமுதலாளிகள் டிவிஎஸ், டாடா, அசோக் லேலண்ட், போன்றோர் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதும் சந்தேகம்தான்.

ராம்தாஸ் அத்வாலே
அதற்காக சீன உணவகங்களை மூட வேண்டும், ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே போல காமெடியாக பேசிக் கொண்டிருக்க முடியாது.. அது உள்ளூரில் அரசியல் செய்ய மட்டுமே பயன்படும். ஆக்கப்பூர்வமாம நமக்கு அரை பர்சென்ட் கூட பயன் தராது. நம்மிடம் சீனா இறக்குமதி செய்வதைவிட, நாம்தான் அதிக எண்ணிக்கையில் பொருட்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறோம்.

வர்த்தகம்
மொத்தம் சராசரியாக 16 சதவீதம் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.. ஆனால் சீனாவோ நம்மிடம் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே இறக்குமதியை நம்பி உள்ளது. ஆக, இந்திய சந்தைக்குள் சீன பொருட்களின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் சீன வர்ததக புறக்கணிப்பு சாத்தியமா என தெரியவில்லை.

குமாரசாமி
இதைத்தான் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சொல்கிறார்.. "சீன பொருட்களுக்கு கிடைக்கும் சந்தை வாய்ப்பை பறித்து, நமது உற்பத்தி பொருட்களுக்கு வழங்குவது தான் எனது நோக்கமாக இருந்தது. அந்த திட்டத்தை இந்த பாஜக அமல்படுத்த நடவடிக்கை எடுத்ததா?, இல்லையா? என்று எனக்கு தெரியாது. நமது எல்லையில் சீனா தாக்குதல் நடத்திய பிறகு சிலருக்கு அந்த நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இப்போது ஞானோதயம் வந்துள்ளது. சீன பொருட்களை புறக்கணிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு உரிய திட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியம். நான் அறிவித்த அந்த திட்டமே அதற்கு சாட்சி" என்கிறார்.

வாய்சவடால்
ஒருவேளை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று இந்தியா கறாராக முடிவெடுத்துவிட்டால், எந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் சரி, எல்லாவற்றையும் உடனே ரத்து செய்ய வேண்டும்... சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும்.. சுதேசி பொருட்களைதான் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் இந்த புறக்கணிப்பு எல்லாம் வெறும் வாய்சவடால்தான்.. எங்கோ ஒரு வடிவத்தில், ஏதோ ஒரு ரூபத்தில் சீன பொருட்கள் நம்முடனேதான் பயணித்து வரும்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications