மிரட்டிய அமெரிக்கா.. ஆயிரம் இருந்தாலும் இந்தியாவிற்கு உதவியாக வந்து நின்ற 2 கம்யூனிஸ்ட் நாடுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கும் - சீனாவிற்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்ட கால் நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.

Donald Trump India

இந்தியா மீது கூடுதல் வரி

டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இந்திய ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த மறுக்கிறது. இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. அதை அதிக லாபத்திற்கு வெளிச்சந்தையில் விற்கிறது. இதனால் வரி கணிசமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு ஆதரவாக வரும் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் வியாழக்கிழமை அன்று மாஸ்கோவில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பிற்கான தேதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இந்தச் சந்திப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

அதிபர் புடின் இந்தியாவிற்கு வருவது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த தோவல், "எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான, நீண்டகால உறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர்மட்ட அளவிலான ஈடுபாடுகள் பெரிய அளவில் பங்களித்துள்ளன. அதிபர் புடின் இந்தியாவிற்கு வரும் செய்தி கேட்டு நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

புடினின் இந்திய வருகை குறித்து மாஸ்கோ இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு, ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் காரணமாக டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் சோவியத் யூனியன் காலத்திலிருந்தே நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கடந்த நான்கு வருட போரின் தொடக்கத்திலிருந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2023 மே மாதத்தில், இந்தியா ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியது, இது அதன் மொத்த இறக்குமதியில் சுமார் 45% ஆகும்.

அதிபர் புதின் வருகை, இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கிய தருணமாக அமையலாம். டிரம்ப்பின் வர்த்தக வரி மிரட்டல்களுடன் இந்த வருகை சரியாகப் பொருந்துகிறது.

களமிறங்கிய கம்யூனிஸ்ட் சீனா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் செல்லவுள்ளார். ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான சீனாவின் அழைப்பை ஏற்று மோடி செல்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அமெரிக்காவின் வரி அழுத்தத்திற்கு இடையே இந்தியா - சீனா நெருக்கமாகி உள்ளது.

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கும் நிலையில், வரி விதிப்பு தொடர்பான விவகாரத்தில் சீனா இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக தொடர் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இது குறித்துப் பேசுகையில், "வரிகளை தவறாகப் பயன்படுத்துவதை சீனா எப்போதும் எதிர்க்கும். இது எங்கள் நிலையான முடிவு" என்று கூறினார். இதன் மூலம், இந்தியாவின் வரி விதிப்பு குறித்த கவலைகளுக்கு சீனா ஆதரவளித்துள்ளதுடன், வரி விதிப்பு முறைகேடுகளை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+