சீனா சும்மாவே இருக்காது போலவே.. பாகிஸ்தானுக்கு தரும் 5ஜி அஸ்திரம்.. எல்லையில் நடக்கும் சம்பவம்!
சென்னை: சீனாவிற்கு கூடுதல் போர் உதவிகளை, ராஜதந்திர ரீதியான ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்க சீனா முடிவு செய்துள்ளது. முக்கியமாக பாதுகாப்பு, ராணுவ ரீதியாக செயற்கைகோள் தகவல்களை பயன்படுத்திக்கொள்ள சீனா பாகிஸ்தானுக்கு கூடுதல் சலுகைகள், அனுமதிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
சீனாவின் பெய்டோ செயற்கைக்கோள் அமைப்பை பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். மே 16 அன்று சீனா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் ஒரு ராஜதந்திர சந்திப்பை நடத்தினர். லாகூரில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா சமீபத்தில் முடக்கியது.
இதன் மூலம் குறைந்தது எட்டு பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது ஒருங்கிணைந்த துல்லியமான தாக்குதல்களை இந்தியா நடத்தியது. இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும். துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய ஏவுகணைகளால் மூன்று விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவமே அறிவித்தது. 3 விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இதையடுத்தே சீனாவின் பெய்டோ செயற்கைக்கோள் அமைப்பை பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். செயற்கைக்கோள் கவரேஜின் அடிப்படையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கான ஆதரவை அதிகரிக்கவும், இந்திய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இரண்டு நாடு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த 5G தொடர்பு அமைப்புகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
கூடுதல் உதவி
அதேபோல் சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-35A-வை பாகிஸ்தானுக்கு விற்க உள்ளது. இதற்கான பணிகளை சீனா வேகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரம் முன் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து சீனா மற்றும் பாகிஸ்தான் மேலும் நெருக்கமாகி உள்ளன. இரண்டு நாடுகளின் உயர்மட்ட தூதரக வட்டாரங்கள் கடந்த சில நாட்களுக்கு சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டன.
இந்தியா பாகிஸ்தான் போருக்கான வெகுமதி இந்த விமானம் என்று சீனா அரசு தரப்பு பாகிஸ்தானிடம் கூறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தற்போது சீனாவில் உள்ளார். ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து 30 J-35A ஜெட் விமானங்களின் முதல் தொகுதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படையை மேலும் பலமாக்கும் வகையில் இந்த விமானங்கள் அனுப்பப்பட உள்ளன.
சீனா இந்த போர் விமானங்களில் பாகிஸ்தானுக்கு 50 சதவீத தள்ளுபடியையும், எளிதான கட்டண விருப்பங்களையும் வழங்கியுள்ளதாக உயர்மட்ட தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது கடனுக்கு விமானங்களை வாங்கிவிட்டு பின்னர் குறைந்த வட்டியில் கடனை திருப்பி தரலாம். பாகிஸ்தான் விமானப்படையின் இந்தியாவிற்கு எதிரான செயல்திறனுக்கான வெகுமதியாக இந்த நடவடிக்கையை சீனா எடுத்ததாக கூறப்படுகிறது. சீனாவின் நவீன ஜென் போர் விமானங்களில் இதுவும் ஒன்று.
சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-35Aவை பெறுவதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படை புதிய வலிமையை அடையும்.












Click it and Unblock the Notifications