Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி புதிய ரயில் நேர அட்டவணை எப்படி இருக்கும்? சென்னைவாசிகளே நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது பாதைக்கான பணிகள் வரும் 27-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மின்சார ரயில் சேவை இனி வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை வழித்தடத்தில் எப்படி இருக்கும் .

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அடுத்த 7 மாதங்களுக்கு கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. இனி மீண்டும் கடற்கரை -வேளச்சேரி இடையே சேவையை தொடங்கும் வரை, வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Chindathiripet - Velachery New Train Time Table from august 27; dear chennai people note this

இதுபற்றி சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும் போது, இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பி.விஸ்வநாத் ஈர்யா கூறும் போது, வேளச்சேரி-சேப்பாக்கம் வரை மின்சார ரயில் சேவை இயக்க முதலில் நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் சேப்பாக்கத்தில் இருந்து போதிய அளவு பேருந்து வசதி இல்லை என்பதால், சிந்தாதிரிப்பேட்டை வரை மின்சார ரயில் சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்.

ஆனால் சிந்தாதிரிப்பேட்டை -சேப்பாக்கம் இடையே சிங்கள் டிராகிக்கில் தான் ரயில்களை இயக்க முடியும். சேப்பாக்கம் டூ வேளச்சேரி இருவழியிலும், சேப்பாக்கம் டூ சிந்தாரிப்பேட்டை சிங்கிளில் வழியில் மட்டுமே ரயிலை இயக்க முடியும் என்பதால் ரயில் சேவைகள் 25 நிமிடத்திற்கு ஒருமுறை தான் இயக்கப்படும்.

எனவே இதுவரை கடற்கரை-வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் 27-ந்தேதி முதல் 80 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும் கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு முதல் ரயில் காலை 5.40 மணிக்கும் கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4.25 மணி முதல் 10.15 மணி வரையிலும் (பீக் அவர்ஸ் இல்) , ஒவ்வொரு 25 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்க உள்ளோம். பீக் அவர்ஸ் இல்லாத மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். சிந்தாதிரிப்பேட்டை வரை ரயில்களை இயக்க காரணம், அங்கு (சிம்சன் பஸ் ஸ்டாண்டில்) இருந்துதான் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைக்கப்படும்.

இந்த 4-வது பாதை அமைக்க 1992-ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது, ஆனால் நிலப்பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் தாமதமாகியது.. தற்போது, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது பாதைக்கான பணிகளை வரும் ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் தொடங்குகிறோம். இந்த திட்டத்துக்கு ரூ.279 கோடி செலவிடப்பட உள்ளது. 7 மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். 4-வது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும்" இவ்வாறு என்றார்.

சிந்தாதிரிப்பேட்டை உடன் நிறுத்துவதற்கு பதிலாக பார்க் வரை இணைத்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் அல்லது சென்ட்ரலுக்கு பேருந்தில் செல்வதற்கு பதில், ரயிலில் செல்லவே மக்கள் விரும்புகிறார்கள். பார்க் (பூங்கா சந்திப்பு) ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் அதிக ரயில்களை இயக்க முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+