இந்திய ராணுவம் அடிச்ச அடி அப்படி.. சீன பாதுகாப்பு கருவி பங்குகள் மளமள சரிவு.. இந்த ஆதாரம் போதுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து இன்று சீன பாதுகாப்புப் பங்குகள் குறிப்பிடத்தக்க விற்பனை சரிவை எதிர்கொண்டன. நேற்று மட்டும் 9% பங்குகளை அந்நாட்டு பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இழந்தன.

மே 13 அன்று, ஹாங் செங் சீனா ஏ ஏரோஸ்பேஸ் & டிஃபென்ஸ் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்து வர்த்தகமானது. முக்கிய பாதுகாப்பு நிறுவனங்களான ஏவிஐசி செங்டு மற்றும் ஜுஜோவ் ஹோங்டா முறையே 8.6 சதவீதம் மற்றும் 6.3 சதவீதம் சரிவைக் கண்டன.

pakistan Jammu Kashmir

ஜே-10சி போர் விமானத்தின் உற்பத்தியாளரான ஏவிஐசி செங்டு விமானம் 8.6 சதவீதம் குறைந்து வர்த்தகமானது.

சீனா எப்படி ஆதாயம் அடையும்?

பாகிஸ்தான் - இந்தியா போர் தொடர்ந்து இருந்தால் அது சீனாவிற்கு சாதகமாக மாறி இருக்கும் . இந்த போர் மூலம் துருக்கிக்கு ₹10,000-30,000 கோடி மற்றும் சீனாவிற்கு ₹1.5-2.5 லட்சம் கோடி வரை நிதி லாபம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆயுத மறுவிநியோகம்: சீனா பாகிஸ்தானின் மிகப்பெரிய பாதுகாப்பு விநியோக பங்காளி. போர் வந்தால் இராணுவ பொருட்கள் விற்பனையில் உடனடி அதிகரிப்பு (ட்ரோன்கள், ஏவுகணைகள், விமானங்கள்) ஏற்படும்.

கடன்: சீனா பாகிஸ்தானுக்கு அதிக கடன்கள் அல்லது இராணுவ உதவியை வழங்கலாம், உள்கட்டமைப்பு அல்லது பாதுகாப்பு உதவி என்று கூறி கடன் தந்து சிக்க வைக்கலாம்.

விநியோகச் சங்கிலி: இந்திய உற்பத்தி தடைபட்டால், உலகளாவிய உற்பத்தி சீனாவிற்கு மாறக்கூடும், குறிப்பாக மின்னணுவியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி சீனாவிற்கு செல்லும். இந்தியாவில் முதலீடு சரியும்.

பெல்ட் & சாலை விரிவாக்கம்: பாகிஸ்தானில் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சீனாவின் BRI மூலம் நிதியளிக்கப்படலாம். பெல்ட் & சாலை விரிவாக்கம் மீண்டும் தொடங்கலாம்.

முதலீடு: போரால் ஏற்படும் சந்தை உறுதியற்ற தன்மை காரணமாக முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறலாம். அவற்றில் சில சீன சந்தைகளுக்கு திருப்பி விடப்படலாம்.

துருக்கி எப்படி ஆதாயம் அடையும்?

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு ஆயுதங்கள் ஏற்றுமதி: துருக்கி பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய ஆயுத சப்ளையர் (போர் ட்ரோன்கள், கடற்படை அமைப்புகள்). இந்த போர் துருக்கிய இராணுவ உபகரணங்களுக்கான தேவையை அதிகரிக்கக்கூடும். இதனால் அந்த நாட்டிற்கு வருமானம் கூடும்.

முதலீடு: பாகிஸ்தான் இந்தியா போர் துருக்கியின் புவிசார் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும். முக்கியமாக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பெறும். முக்கியமாக ராணுவ ரீதியாக முதலீடுகளை அதிகரிக்கும். இது பாகிஸ்தான் நிதியை பாதிக்கும்.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள்: துருக்கி பாகிஸ்தான் அல்லது உலகின் பிற இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்யலாம். இதனால் பாகிஸ்தானுக்கு மேலும் இழப்பு ஏற்படும். துருக்கிக்கு ஜாக்பாட்தான்.

துருக்கி ராஜதந்திரம்: துருக்கிய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் பெரும்பாலும் மோதல் மண்டலங்களில் உதவி, கட்டுமானம் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவது வழக்கம். இதன் மூலம் அவர்களும் பலன் அடைவார்கள்

எண்ணெய் மற்றும் வர்த்தக வழித்தட மாற்றம்: பொதுவாக ஒரு போர் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும். துருக்கி இதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதியை செய்து பலன் அடையும் . முக்கியமாக கராச்சி போர்ட் பாதிக்கப்பட்டால் துருக்கி நேரடி பலன் அடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+