பேட்டியின்போது சூடான சின்மயி.. விளக்கம் தர மறுத்த லீனா.. பிரஸ் மீட்டில் சலசலப்பு
சின்மயி உள்ளிட்டோரின் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை: மீ டூ இயக்கத்தின் மூலமாக புகார் அளித்த சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை ஆகியோரின் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சேப்பாக்கத்தில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பாடகி சின்மயியுடன் கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டனர்.

மீண்டும் சொல்ல முடியாது
அப்போது செய்தியாளர்களிடம் லீனா மணிமேகலை நடந்த விவரங்களை கூறினார். பின்னர் அதுகுறித்து செய்தியாளர்கள் மீ்ண்டும் கேள்வி எழுப்பினர். ஆனால் மீண்டும் அதற்கு பதில் சொல்ல முடியாது என லீனா மணிமேகலை சொல்லிவிட்டார்.

செய்தியாளர் சந்திப்பு
அத்துடன், தமது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு வாருங்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இதனால் அங்கு சலசலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது உடன் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இதில் தலையிட்டு நிலைமையை சமாதானப்படுத்தினார். அதற்குள் சின்மயி வந்துவிட்டார். சின்மயி வருவதற்கு தாமதம் ஆனதால், செய்தியாளர் சந்திப்பும் தாமதமாகவே தொடங்கியது.

சட்டப்பூர்வ நடவடிக்கை
பின்னர் ஒருகட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசி கொண்டிருந்த சின்மயியும், சூடாகவே பதிலளித்தார். குறிப்பாக, உங்கள் பிரச்சினையை திரைத்துறையில் உள்ள சங்கத்தினரிடம். ஏன் சொல்லவில்லை, இதனை சட்டப்பூர்வமாகவே அணுகலாமே போன்ற கேள்விகளுக்கு கோபமடைந்த சின்மயி கைகூப்பி, "தயவு செய்து கேட்கிறேன் நிறுத்தி கொள்ளுங்கள், இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் பெண்கள் வெளியே வந்து தைரியமாக பிரச்சனைகளை சொல்ல வருகிறார்கள்.

துணையாக இருங்கள்
போகிற போக்கில் எல்லாரையும் அசிங்கப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆண்கள் எங்களுக்கு துணையாக இருங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கறோம். 15 வருஷத்துல 10 வீடு மாறிட்டேன். அதனால அந்த பாஸ்போர்ட் கிடைக்கல. கண்டிப்பா கிடைச்சிடும்" என்றார் ஆவேசத்துடன்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications