ஓடிபியே வரலை.. பணம் போச்சு.. நூதன மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸில் பாடகி சின்மயி புகார்
சென்னை: தன்னுடைய குடும்பத்தினர் நூதன மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளது குறித்து சைபர் கிரைம் போலீஸில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியவர் சின்மயி. இவர் டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார். இவர் தனுத 4 வயது முதலே கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார்.

2000 ஆம் ஆண்டு ஆல் இந்திய ரேடியோவிலிருந்து தங்க பதக்கத்தை பெற்றார். சின்மயி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச், மராத்தி , ஸ்பானிஷ், மலையாளம், பஞ்சாபி என இத்தனை மொழிகளையும் சரளமாக பேசுவார்.
இவர் சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் வென்றார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடியுள்ளார். இவர் தமன்னா, சமீரா ரெட்டி, சமந்தா, திரிஷா உளளிட்டோருக்கு டப்பிங் பேசியுள்ளார். திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு டப்பிங் பேசியிருந்தார்.
இதையடுத்து தெலுங்கில் அதே படத்திற்கு சமந்தாவுக்கும் இந்தியில் எமி ஜாக்சனுக்கும் பேசியிருந்தார். சிறந்த டப்பிங் கலைஞருக்கான நந்தி விருதை பெற்றுள்ளார். நயன்தாராவுக்கு ஸ்ரீராம ராஜ்ஜியம், நானும் ரவுடிதான் ஆகிய படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

இவர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருவர் உள்ளனர். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியுலகிற்கு கொண்டு வருபவர். அது போல் பத்ம சேஷாத்ரி, கேளம்பாக்கம் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வக்கிரங்களையும் தோலுரித்து காட்டியவர்.
இவரும் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அது போல் டாக்டர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்புகளை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வயதானவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஓடிபியை முதியோர்களிடம் இருந்து ஏமாற்றி பெற்றுதான் பணம் பறிபோவதை பார்த்துள்ளோம். ஆனால் ஓடிபியே இல்லாமல் பணமோசடி நடந்துள்ளதை சின்மயி தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினரின் தொலைபேசிக்கு மின் கட்டணம் குறித்து ஒரு லிங்க் அனுப்பப்பட்டதாம். அதை கிளிக் செய்த போது வங்கியில் இருந்த பணம் காணாமல் போனது என்கிறார்.
வயதானவர்களை குறி வைத்தே இது போன்ற மோசடிகள் நடப்பதாக சின்மயி,சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இது போல் நிறைய மோசடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் எப்படியாவது ஏமாற்றி விடுகிறார்கள். போலீஸாரும் நிறைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications