சித்திரை 10ம் தேதி தமிழகமே ஸ்தம்பிக்கும் அதிசயம்? பட்டு வேட்டியில் வாக்குச்சாவடிக்கு வரும் மணமக்கள்
சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால், அன்றைய தினம் ஒரு சாதாரண தேர்தல் நாளாக மட்டும் அமையாமல், கலாச்சார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தமிழகத்தோடு பின்னிப்பிணைந்த ஒரு முக்கிய நாளாக மாறியிருக்கிறது. ஆம், சித்திரை மாதம் 10-ம் தேதிதான் தேர்தல் நடக்க போகிறது.. இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த வளர்பிறை சுபமுகூர்த்த நாள் ஆகும்.. இதுதான், தற்போது அரசியல் களத்தில் ஒருவிதத் தயக்கத்தையும், அதே சமயம் சுவாரசியமான எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.. அது என்ன?
தமிழகமே ஆர்வத்துடன் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி உள்ளது.. அந்தவகையில், வரப்போகும் சித்திரை 10ம் தேதி வாக்குப்பதிவு நாள் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் மற்றும் கிரகப் பிரவேசங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள முகூர்த்த நாளாகும்.

அதிலும், குமரி மாவட்டத்தை பொறுத்தவரை "பத்தாம் உதயம்" என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு கலந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறும் இந்த நன்னாளில், அதிகாலையிலேயே ஏர் பூட்டி விவசாயத்தைத் தொடங்குவதை விவசாயிகள் மரபாக கொண்டுள்ளனர்.
சுபமுகூர்த்த தினம்
"விதை ஒன்று போட்டால் வாழ்வு விளையும்" என்ற நம்பிக்கையுடன் அதிகாலையிலேயே பணிகளை முடித்துவிட்டு, நேராக வாக்கு சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்ற நாஞ்சில் நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர். உழைப்பையும் ஜனநாயகத்தையும் இணைக்கும் இவர்களின் வேட்கை பாராட்டுக்குரியது..
இருந்தாலும் அன்றைய தினம் முகூர்த்த நேரம் காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் இருப்பதால், திருமண வீட்டார் மற்றும் விருந்தினர்கள் வாக்குச் சாவடிக்கு வருவது தள்ளிப்போகக்கூடும் என்ற அச்சம் அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறதாம்.
வளர்பிறை - பத்தாம் உதயம்
அதேபோல வெளியூர்களில் நடைபெறும் திருமணங்களுக்கு செல்லும் வாக்காளர்கள், தங்கள் சொந்த ஊரில் வாக்களிக்க முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது... இதன் காரணமாகவே, "திருமணத்திற்கு வருபவர்கள் கையில் தேர்தல் மையுடன் வரவும்" என்ற விழிப்புணர்வு வாசகங்களை திருமண அழைப்பிதழ்களில் அச்சிடும் புதிய கலாச்சாரம் இப்போது உருவாகியுள்ளது..
இந்த தேர்தல் தேதியின் தாக்கம் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் யூகிக்கப்படுகிறது.. குறிப்பாக முகூர்த்தம் முடிந்த கையோடு, பட்டுச்சேலை மற்றும் வேட்டியுடன் மணமக்கள் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் அபூர்வக் காட்சிகளை நாம் இந்த முறை அதிகம் பார்க்கவும் சான்ஸ் இருக்க போகிறது..
கறி விருந்து - ஜனநாயக திருவிழா
அதுமட்டுமல்ல, கங்கா சப்தமி மற்றும் கிராமப்புற கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதால், அன்னதானம் மற்றும் கறி விருந்துகளுக்கு மத்தியில் மக்கள் தங்கள் அரசியல் உரிமையை நிலை நாட்டப் போராட வேண்டியிருக்கும். உறவுகளுக்காகவும், மரபுகளுக்காகவும் ஒதுக்கும் நேரத்தில், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.
மண்ணை போற்றும் பத்தாம் உதயம், உறவுகளைக் கொண்டாடும் திருமணம், இவைகளுக்கு மத்தியில் உரிமையை நிலைநாட்டும் தேர்தல் என இவை 3ம் ஒரே நாளில் சங்கமிப்பது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.. அந்த வகையில் வரப்போகும் தேர்தல் அனைவருக்குமே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது...!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications