வில்லாவில் தங்கிய ஜோடி.. சித்ரா தற்கொலையின்போது ரூம் ஹாலில் இருந்த ஹேம்நாத்.. புதிய தகவலால் பரபரப்பு
விஜே சித்ரா நேற்று நசரத்பேட்டை அருகே உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அவரது உடலுக்கு இன்றுதான் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதில் வந்த அறிக்கையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. அவரது முகத்தில் இருந்த நகக்கீறல்கள் அவருடையதுதான் என்றும் போலீஸார் கூறினர்.

பெற்றோர் மறுப்பு
ஆனால் இதை சித்ராவின் நண்பர்களும், பெற்றோரும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். தைரியமான பெண்ணான சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

விசாரணை
இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத், அவருடன் நடித்த நடிகர், நடிகைகள், பெற்றோர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வில்லாவில் தங்கிய சித்ரா
சித்ரா ஹேம்நாத் இருவரும் வில்லாவில் தான் தங்கியிருந்தனர். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஹேம்நாத்துடன்தான் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் பதற்றமாகவே சித்ரா பேசியதாக தெரிகிறது. பின்னர் குளித்துவிட்டு வருவதாக கூறி அறையை தாழிட்டுக் கொண்டுள்ளார்.

மாற்றுச் சாவி
அதன்பிறகுதான் அவர் வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை என்பதால் ஹோட்டல் ஊழியர்களை வைத்து மாற்று சாவி கொண்டு அறையை திறந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விவரங்கள் ஆர்டிஓ விசாரணையில் தெரிய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications