சித்ராவையும் விட்டுவைக்காத "நிற அரசியல்".. நொறுக்கி தள்ளி மேலே வந்த துணிச்சல்.. சபாஷ்
நடிகை சித்ரா நிற வேறுபாடுகளை கடந்து மேலே வந்துள்ளார்
சென்னை: நிறவேறுபாடுகள் நிறைந்துள்ளது மீடியா உலகம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த சித்ரா, அதே மீடியா உலகை வென்று காட்டியது மலைப்பாக பேசப்பட்டு வருகிறது.
மறைந்த சித்ராவுக்கு 28 வயசுதான் ஆகிறது.. இந்த வயதிலேயே அறிவு, திறமை, தன்னம்பிக்கை, அழகு, பொறுமை, சமூக அக்கறை நிறைந்து வலம் வந்துள்ளது சாதாரண விஷயம் இல்லை.
ஒவ்வொருவரும் சித்ரா பற்றி பேசிய பேச்சுக்களும், வெளியிடும் கருத்துக்களும், வியப்பை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகிறது.

வாய்ப்பு
அதில், ஒரு பேட்டியில் சித்ரா பேசுகிறார், "பெண் என்றாலே வீட்டிலும், கிச்சனிலும் தான் இருக்க வேண்டும் என்று ஒரு சமுதாயம் சொல்கிறது... அந்த சமுதாயத்தில் ஒரு குடும்ப பெண் தான் நானும்... நான் இப்போது இருக்கும் இந்த இடத்திற்கு அதிகமா கஷ்டப்பட்டுதான் வந்தேன்.

ஆங்கர்
நான் ஆடிஷனுக்கு நிறைய இடம் போயிருக்கிறேன்.. சில இடங்களில் "நீயெல்லாம் எப்படி ஆங்கரா வருவ? நீ எல்லாம் எப்படி நடிகையா வருவே? என் மூஞ்சிக்கு நேரே சொல்லி இருக்காங்க.. ஏன்னா, நான் ரொம்ப கலர் கிடையாது.. டஸ்கி கலர்தான்.. ஆனா, இதுவும் ஒரு நிறம்தானே.. இதுவும் ஒரு அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல... சின்னத் திரையிலும் இந்த கொடுமை இருக்கு" என்று கூறியுள்ளார்.

துணிச்சல்
இந்த பேட்டியில் மட்டுமல்ல, டிவியில் நிற வேறுபாடு அதிகம் என்ற கருத்தை முன்வைத்து பல இடங்களில் துணிச்சலாக பேட்டி தந்து பரபரப்பை கிளப்பி இருந்தார் சித்ரா.. தன்னுடைய டஸ்கிக் ஸ்கின்னுக்காக சித்ரா பல இடங்களில் வாய்ப்பை இழந்ததாக உருக்கமாக தெரிவித்து இருக்கிறார். சித்ரா இப்படி சொல்வதை பார்த்தால், நிற வேறுபாடு சம்பந்தமாக அவமானம், தோல்வி என ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்துதான் இந்த வெற்றியை தக்க வைத்துள்ளார் என்று உறுதியாகிறது.

கெத்து
அதுமட்டுமல்ல, "ஆரம்பத்தில் குடிசை வீட்டில் இருந்தேன்.. அப்புறம் குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டி தந்தாங்க.. அதுக்கப்பறம் நானே சொந்தமாக வீடு கட்டி என் அம்மா, அப்பாவை அதில் தங்க வெச்சிருக்கேன்" என்று கெத்தாக சொல்கிறார் சித்ரா.. விடாமுயற்சியும், தன் திறமை மீது நம்பிக்கையும் வைத்தால், எல்லாமே எட்டும் தூரம்தான் என்பதே சித்ராவின் தாரக மந்திரமாக இருந்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications