சித்ரா தற்கொலை விசாரணையின் அடுத்த நகர்வுகள் - நகங்கள், செல்போன் உரையாடல்கள் ஆய்வு
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் முல்லையாக மணம் வீசி பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகையின் மரணத்தை பல ரசிகர்கள் இன்னமும் நம்பாமல் இருக்கின்றனர்.
சித்ரா நடித்த சீரியல், நடன வீடியோக்களை இன்றைக்கும் யுடுயூப்பில் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவரது தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரணத்தில் மர்மம்
சித்ரா இறந்து போய் இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னமும் மர்மம் விலகவில்லை. தற்கொலை வழக்கில் இப்போது வரை அதாவது போஸ்ட் மார்ட்டம் முதல் ஆர்டிஓ விசாரணை வரை, அனைவரும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டாலும் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பதுதான் தெரியாமலேயே உள்ளது.

கணவர் கைது
நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சித்ரா தற்கொலை செய்தது எப்படி
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டதாகவும், பட்டுப் புடவையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கணவர் சந்தேகம்
சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடித்ததாக சித்ரா சொன்னால், உடனே சைக்கோவாக மாறிவிடுவாராம் ஹேமந்த். சித்ராவை கடித்து, கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தி கொடுமைப்படுத்துவார் என ஹேமந்தின் நண்பர் ரோஹித் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆய்வுக்கு அனுப்பட்ட நகங்கள்
ஹேமந்த் ஜாமீன் கோரிய மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சித்ராவின் நடத்தையில் ஹேமந்த் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும், சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தகவல்
அதேபோல அவரது தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கைகள், பிப்ரவரி 10ஆம் தேதி வந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

சித்ரா முகத்தில் காயங்கள்
புடவையால் நடிகை சித்ரா தூக்குப் போட்டதால் அவரின் கழுத்தில் காயங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அது நகக்கீறலாக இருக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

விலகாத மர்மம்
சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. அப்போதுதான், சித்ரா தற்கொலைக்கு வேறொரு காரணம் இருக்கலாம் என்று தன் கருத்தையும் ஆர்டிஓ தரப்பு வெளிப்படுத்தி இருந்தது. சித்ராவின் உடம்பில் ஏற்பட்ட காயம் எப்படி வந்தது என்பதற்கான மர்மம் இன்னும் சில நாட்களில் விலகி விடும்.












Click it and Unblock the Notifications