என் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டா? அமைச்சர் உதயநிதியின் வலதுகரம் சிற்றரசு மறுப்பு
சென்னை: அமைச்சர் உதயநிதியின் வலது கரமாக சொல்லப்படும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக வரும் செய்திகளை சிற்றரசு மறுத்துள்ளார்.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.

உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.
ஜாபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இயக்குநர் அமீர், பாசித் புகாரி உள்ளிட்டோரின் பெயர்களை வாக்குமூலமாக தெரிவித்திருந்தாராம். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதில் போதை பொருள்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைத்தனர்.
அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதலே சென்னையில் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், புகாரி ஹோட்டல், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அமீரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
அந்த வகையில் அமைச்சர் உதயநிதியின் வலது கரமான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் நேரத்தில் இது போன்றதொரு விவகாரம் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சிலர் கூறி வந்தனர். ஆனால் இந்த அமலாக்கத் துறை சோதனையை சிற்றரசு மறுத்துள்ளார். "என் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை" என சிற்றரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications