"அந்த" ஒரு நிமிடம்.. ரூமுக்குள் என்ன நடந்தது.. சித்ரா மரணத்தில் கிளம்பும் சந்தேகங்கள்.. ஒரே மர்மம்!

சித்ராவின் மரணத்தில் தொடர்ந்து சந்தேகங்கள் எழுந்தபடியே உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்ரா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் தினம் தினம் வெடித்து வருகின்றன.. அந்த வகையில், இந்த வழக்கின் போக்கு சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறதா? இறந்துபோன சித்ராவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்குமா? என்பன போன்ற கேள்விகள் தொர்ந்து சோஷியல் மீடியாவில் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே என் மகளை கொன்னுட்டான் என்று சித்ராவின் அம்மா கதறி வருகிறார்.. அதேபோல, 2 நாளைக்கு முன்பு சித்ராவின் உதவியாளர் சலீம் ஒரு பரபரப்பை கிளப்பினார்.

"என்னிடம் ஹேமந்த் கடுமையாக நடந்து கொண்டார்.. என் செல்போனில் இருந்த சித்ராவின் போட்டோக்கள், வீடியோக்களை ஹேமந்த் டெலீட் செய்துவிட்டார்.. வேலைக்கும் போகாமல், சித்ரா ஷூட்டிங்கிற்கு சென்று விட்டால் அடிக்கடி போன் செய்து கொண்டே இருப்பார்" என்று சலீமின் பேச்சும் ஹேமந்தையே முன்னிறுத்தி வருகிறது.

 ரேகா நாயர்

ரேகா நாயர்

இந்நிலையில், நேற்று சித்ராவின் நெருங்கிய தோழி ரேகா நாயர் இன்னொரு பகீரை கிளப்பி உள்ளார்.. ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியி்லும் ஹேமந்த்தை முன்னிறுத்தியே சந்தேகங்களை வைத்துள்ளார்.. அதில் "ஹேமந்த் நல்லவன்தான், சித்ராவும் நல்லவர்தான், சரி, என்ன நடந்ததுன்னு யாராவது சொல்லுங்களேன். ஒரு ஹோட்டலில் கேமிரா இல்லையாம்? அப்படின்னா அந்த ஹோட்டலை இழுத்து மூடுங்க.. அந்த ஹோட்டல்ல 3-ம்தேதியில் இருந்து 9-ம்தேதி வரை இருந்திருக்காங்க.. அப்ப எத்தனை மணிக்கு அங்கே வந்தாங்க, வெளியே போனாங்க, ஓட்டல் ஓனர் யாரு? சிசிடிவி ஏன் இல்லைன்னு யாராவது கேட்டாங்களா?

செல்போன்

செல்போன்

என்னை மட்டும் ஏன் கேட்கிறாங்க? கவர்ன்மென்ட் என்ன பண்ணுது? அபயா சிஸ்டர் கேஸ் மாதிரி, இது நாளைக்கு வெடிச்சு வரும் பாருங்க... சித்ராவின் போன் இருக்கு, ஹேமந்த்தின் போன் இருக்கு, ஆனால், இவங்களுக்குள்ள என்ன பேச்சுவார்த்தைகள் நடந்தது என்பதை ஏன் சைபர் கிரைம் வெளியே எடுக்கல? ஒரு பொண்ணு கயிறு போட்டு தொங்கும் வரை ஒருத்தன் பார்த்துட்டே இருப்பானா?

 சாட்சியங்கள்

சாட்சியங்கள்

அப்போ என்ன நடந்தது? நான் அவ கூட சண்டை போட்டுட்டு வெளியே போயிட்டேன், தம் அடிக்க போயிட்டேன் இப்படி ஏதாவது சொல்லி, அதுக்கான சாட்சியங்களை சொல்ல சொல்லுங்க.. அந்த ஒரு செகண்ட் என்ன நடந்ததுன்னு மட்டும்தான் எனக்கு தெரியணும்.. இது தற்கொலை கிடையாது" என்று அடித்து சொல்கிறார் ரேகா நாயர்!

 போதை பொருள்

போதை பொருள்

ஏற்கனவே சித்ரா கழுத்தில் கடுமையான தழும்புகள் எதுவும் இல்லை... ஆனால், சித்ராவின் மார்பில் காயங்கள் உள்ளன.. அந்த ரூமில் ஏதோ ஒரு பொட்டலத்தில் போதை பொருள் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.. இதற்கு நடுவில் ஹேமந்த்தின் முரண்பாடான வாக்குமூலங்கள் என்று இந்த வழக்கு சென்று கொண்டிருக்கும் திசையில், தினம் தினம் சித்ராவின் மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபடியே உள்ளன.. ஆக மொத்தம், இந்த வழக்கில் உண்மை கண்டறியப்படுமா அல்லது சாதாரண வழக்காக கடந்து சென்றுவிடுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வியாக சித்ராவின் வழக்கு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+