சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருடன் ரொம்ப நேரமாக பேசினார் சித்ரா.. மறுமுனையில் இருந்தது யார்.. தீவிர விசாரணையில் போலீஸ்!

நடிகை சித்ராவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை பார்த்து அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் ஷாக்கில் உறைந்து விட்டனராம்!

சித்ரா தற்கொலையில் ஏகப்பட்ட சந்தேகங்கள் நிலவி வந்தன.. பல கேள்விகள் மர்ம முடிச்சுகளாக வலம் வந்தன.. ஒட்டு மொத்த பேரின் கவனமும், அவரது கணவர் ஹேமந்த் மீதுதான் படிந்திருந்தது.

இதற்கு காரணம், அவர் மட்டும் தான் தற்கொலையின்போது அந்த ரூமில் இருந்தவர்.. இவரது வாக்குமூலத்தை வைத்தே போலீசார் விசாரணையை ஆரம்பித்தாலும், ஹேமந்த்துக்கு எதிராக பலரும் குற்றச்சாட்டுகளை கூறினர். நேற்று மதியம் சித்ராவின் அம்மாவும் ஹேமந்தைதான் நேரடியாக குற்றம் சாட்டினார்.

சின்னத்திரையில் மின்னலென தோன்றி மறைந்த சித்ரா... கண்ணீருடன் விடை கொடுத்த ரசிகர்கள்சின்னத்திரையில் மின்னலென தோன்றி மறைந்த சித்ரா... கண்ணீருடன் விடை கொடுத்த ரசிகர்கள்

ஹேமந்த்

ஹேமந்த்

ஏற்கனவே சித்ராவின் அம்மாவுக்கு, ஹேமந்த் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாத நிலையில், சித்ராவிடம் பலவாறாக ஹேமந்த் பற்றின தகவல்களை எடுத்து சொல்லி வந்துள்ளார்.. தங்களுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்ட கோபமும், அவரது அம்மாவுக்கு இருந்ததால், இந்த பிரச்சனையில்தான் மனஉளைச்சலுக்கு கடந்த ஒரு மாதமாகவே சித்ரா ஆளாகி வந்துள்ளார்.

அம்மா

அம்மா

சம்பவத்தன்று, யாரிடமோ சித்ரா போனில் ரொம்ப நேரமாக பேசி கொண்டிருக்கிறார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சித்ரா அவரது அம்மாவுடன்தான் பேசியிருக்கிறார் என்பது தெளிவாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, ரூமுக்குள் வந்தும் தன் அம்மாவுடன் போனிலேயே வாக்குவாதத்தில் இறங்கி உள்ளார்.. கடைசியாக அம்மாவுக்குதான் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார்.. அதில், ஹேமந்த் என் கணவர், எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன்" என்று உறுதிபட தெரிவித்தும் உள்ளார். இதைதவிர வேறு சில மெசேஜ்களையும் தன் அம்மாவுக்கு சித்ரா அனுப்பி உள்ளாராம்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

பல சந்தேகங்கள், கேள்விகள், மர்மங்களுக்கு எல்லாம் போஸ்ட் மார்ட்டம் ஒன்றுதான் பதிலாக இருக்கும் என்று நம்பப்பட்டது.. ஆனால், சித்ராவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர இன்னும் சில தினங்களாகும் என்கிறார்கள்.. அதற்கு முன்பு டாக்டர்கள், போலீஸாரிடம் வாய்மொழியாக சில தகவல்களை சொல்லவும், அதன்படியே சித்ராவின் சடலத்தை டாக்டர்கள் குழு போஸ்ட் மார்ட்டம் செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான அறிகுறிகளே காணப்படுவதாக சொல்லி உள்ளது.

ஆர்டிஓ

ஆர்டிஓ

இந்த தகவலை கேட்டதுமே சித்ராவின் குடும்பத்தினரும், நண்பர்களும் ஷாக் ஆகி உள்ளனர். இருந்தாலும் ஆர்டிஓ விசாரணை உட்பட போஸ்ட் மார்ட்டத்தின் முழு அறிக்கை வந்தபிறகே சித்ரா மரணத்துக்கான காரணம் தெரியும் என்று போலீசார் சொல்கிறார்கள். இந்த முதல்கட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, தற்கொலை என்று தகவல் வெளியாகி உள்ளதால், ஹேமந்த் மீது இப்போதைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உறுதி

உறுதி

ஆர்டிஓ விசாரணைக்குப்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது கூறப்பட்டாலும், சித்ரா தன் அம்மாவுடன்தான் ரொம்ப நேரமாக போனில் பேசினார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனராம்.

English summary
Chitras last phone call with her Mother says Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X