பள்ளி மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு ஆபாசப்படங்களை அனுப்பிய மாணவனின் சித்தப்பா கைது
சென்னை: சென்னை நீலாங்கரையை சேர்ந்த பசுபதி என்பவர் மாணவர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பியதால் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த பாலவாக்கத்தில் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக, தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதில் ஒரு மாணவனது வாட்ஸ்அப் நம்பரிலிருந்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

செல்போன்
பின்னர், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்பொழுது தன்னுடைய தாத்தாவின் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளார்.

வாட்ஸ் அப் குழு
இதனை அறிந்த மாணவனின் சித்தப்பா பசுபதி என்பவர் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் குழுவில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியது தெரியவந்தது.. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நகை பறிப்பு
சென்னை திருவொற்றியூரில் ஓடும் ரயிலில் ஏறி பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து
7 1/2 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி விஜயலட்சுமி(46). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஓடும் ரயில் நடந்த சம்பவம்
கடந்த 15 ஆம் தேதியன்று விஜயலட்சுமி தனது 3 குழுந்தைகளுடன் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயிலில் பயணித்தார். திருவொற்றியூரில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் விஜயலட்சுமி இருந்த பெட்டியில் ஏறிய மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 7 1/2 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளையர்கள்
உடனடியாக விஜயலட்சுமி சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் ரயில்வே கண்காணிப்பாளர் இளங்கோ உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் மேற்பார்வையில் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பரந்தாமன், காவலர்கள் வீரபாகு, சேக் உஸ்மான், சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி செல்போன் பறிப்பு
இந்நிலையில் சம்பவம் நடந்த திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது வழிப்பறி கொள்ளையர்கள் விட்டு சென்ற செருப்பு கிடைத்தது. மேலும் பழைய குற்றவாளிகளின் படங்களை விஜயலட்சுமியிடம் காண்பித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் நடந்த அன்று ரயில் நிலையத்திற்கு அருகே வந்து சென்றது இதே பகுதியில் அடிக்கடி செல்போன் பறிப்பில் ஈடுபடும் தினேஷ் என்கிற கிளி(19) என தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையின்போது ரகசிய தகவலாக கிடைத்தது.

கைதான குற்றவாளி
உடனடியாக திருவொற்றியூர் பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு கஞ்சா போதையில் இருந்த தினேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஜயலட்சுமியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 7 1/ 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் நகை பறிப்பு தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications