சோழப் பேரரசி செம்பியன் மகாதேவி.. 1000 ஆண்டுகள் பழங்கால சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழ பேரரசியான செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களுக்கு செம்பியன் மகாதேவி யார் என்பது தெரிந்திருக்கும். ராஜராஜ சோழனின் பாட்டியும், சுந்தர சோழனின் தாயும், கந்தராதித்ய சோழரின் மனைவியுமான செம்பியன் மகாதேவி, சிவ வழிபாட்டில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

யார் இந்த செம்பியன் மகாதேவி?
கணவரின் மறைவுக்கு பின், சோழப் பேரரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த செம்பியன் மகாதேவி, கோயில்களை கட்டட முறைகளில் முக்கிய மாற்றங்களை செய்து காட்டியவர். அதுநாள் வரை செங்கல் கற்களை கொண்டு கட்டப்பட்டு வந்த கோயில்களை, இவரின் வழிகாட்டுதல் பேரில் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது.

செம்பியன் மகாதேவி சிலை
இப்படி கோயில் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செம்பியன் மகாதேவியின் மறைவுக்கு பின், நாகை மாவட்டத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் செம்பியன் மகாதேவிக்கு உலோகத்தால் சிலை அமைக்கப்பட்டது.

சிலை திருட்டு
செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் பழமையான உலோக சிலையாகும். இது கடந்த 1958ம் ஆண்டு திருடப்பட்டதாக யானை ராஜேந்திரன் என்பவர் புகாரளித்தார். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஃபிரீர் கேலரி ஆஃப் ஆர்ட் அருங்காட்சியகத்தில் மூன்றரை அடி உயரம் கொண்ட செம்பியன் மகாதேவி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், உண்மையான சிலை கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல் தற்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலை, 1958ம் ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகளால் வைக்கப்பட்ட சிலை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள செம்பியன் மகாதேவி சிலையை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications