முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு அளித்த கிறிஸ்தவ ஆயர்கள்.. விஜய் மீதும் மறைமுக அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கிறிஸ்தவ ஆயர்கள் தெரிவித்துள்ளனர். FCRA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்ப்பட்ட கிறித்துவ தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நன்றியும் தெரிவித்தனர்.

மேலும் கிறிஸ்தவர் என்பதற்காக எவரையும் ஆதரிக்காமல், கொள்கை, கோட்பாடு அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், திரையில் செய்வதை எல்லாம் தரையில் செய்ய முடியாது என்பதை உணர்ந்து வாக்களிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Christian Bishops Extend Support to MK Stalin Back DMK Alliance Ahead of Tamil Nadu Polls

சிறுபாண்மையினரை நசுக்க பார்க்கிறார்கள்

அப்போது முதல்வர் ஸ்டாலினுடம் ஒவ்வொருவராக பேசிய கிறிஸ்தவ ஆயர்கள் தெரிவித்ததாவது:- கிறிஸ்தவர்களின் முக்கிய நோக்கமே தொண்டு செய்வது தான்.. மக்களுக்கு உதவி செய்வதற்கு தான்.. இயலாதவர்கள், கஷ்டப்படுபவர்களின் துயரை துடைப்பது, அவர்களின் கண்ணீரை துடைப்பது தான் முக்கிய நோக்கமே.. ஆனால் பாஜகவிற்கு இவர்களை சுத்தமாக பிடிக்காது.

உங்களுடைய குரல் பலத்த குரலாக, தொகுதி மறுவரையறையில் எங்களுக்கு குரல் குடுத்து நீதிக்கு நிலைநாட்டியது போல, இன்னும் பல பிரச்சினைகளுக்கு, வாழ்வு அச்சுறுத்தப்படுகிறதோ அங்கு எல்லாம் நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் உங்களோடு நிற்கிறோம். எப்போதும் உங்களுடனே நிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அவங்க முதலில் இஸ்லாமிய சகோதரர்களை தனிமைப்படுத்தி அவங்களை நசுக்குனாங்க.. இப்போது சிறுபாண்மையினரை தனிமைப்படுத்தி நசுக்க பார்க்கிறார்கள். எங்கள் குரல்வளையை நெரிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே உங்களிடம் வந்து இருக்கோம். உங்களை நம்புகிறோம்" என்றனர்.

தோற்கடிக்க வேண்டும்

மேலும் சிலர், "முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோல்வியடையச் செய்ததற்கு நன்றி கூறினோம். கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு, எஃப்சிஆர்.ஏ என்ற வெளிநாட்டு நிதி பெறுகிற அந்த சட்டங்களை மிகவும் கடுமைப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு என்றே, கிறிஸ்துவ மக்களுக்கு என்றே கொண்டு வரப்படுகின்ற மசோதா தற்போது தாக்கல் ஆக இருக்கின்ற இந்த நேரத்தில் எப்படி தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க செய்தீர்களோ அதேபோல இந்த கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை குறிவைத்து, கிறிஸ்தவர்களின் தொண்டு நிறுவனங்களை குறிவைத்து முடக்க நினைக்கும் இந்த எஃப்சிஆர்.ஏ சட்டத்தையும் முன்னின்று தோற்கடிக்க வேண்டும் என்று கூறினோம்" என்றனர்.

கிறிஸ்தவர் என்பதற்காகவே ஆதரிக்க கூடாது என்ற ஆயர்கள், திரையில் செய்வதை எல்லாம் தரையில் செய்ய முடியாது என்பதை உணர்ந்து வாக்களிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யபடும் என்று தெரிவித்ததுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யை மறைமுகமக பேசியிருப்பதாக பார்க்கபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+