இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் இன்று.. சர்ச்சுகளில் புனித வெள்ளி அனுசரிப்பு
சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இந்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த பிறகு 3வது நாளில் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக கிறஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 5ம் தேதி கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியது. சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் தொடங்கியது. அதன்பிறகு தினமும் சர்ச்சுகளில் பிரார்த்தனை, ஆராதனை நடந்து வந்தது. இந்த தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவை உள்ளது.
அதன்படி நேற்று புனித வியாழன் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் இன்று புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை புனித வெள்ளி என்பது துக்க தினமாகும்.
மக்களுக்காக உயிர் நீத்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல சர்ச்சுகளில் இயேசு கிறிஸ்து மரணத்தை நினைவுப்படுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் இன்று புனித வெள்ளி பிரார்த்தனைகள் நடந்தது.
அதேபோல் பல மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.
சிலுவையில் இயேசு அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு அவர் பேசிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி பிரார்த்தனை நடக்கும். சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க சர்ச்சுகளில் இன்று மாலையில் சிலுவைப்பாதை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித வெள்ளி தினத்தையொட்டி இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. அதாவது இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications