காவடியுடன் வந்த முருக பக்தர்கள்.. புனித மைக்கேல் தேவாலய திருத்தந்தை செய்த செயல்! இதுதாங்க தமிழ்நாடு!
திருநெல்வேலி: காவடி எடுத்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு, இரவு தங்குவதற்கு தேவாலயத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கும் சம்பவம், தமிழ்நாடு மத நல்லிணக்கத்தில் எந்த அளவுக்கு புரிதலுடன் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது.
வட மாநிலங்களில் மதத்தின் பெயரால் மோத் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் மாநிலங்கள் மத நல்லிணத்திற்கு அடையாளமாக மாறி வருகின்றன. நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இன்று திருநெல்வேலியில் நடந்திருக்கும் சம்பவம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

என்ன நடந்தது?
திருநெல்வேலியின் தெற்கு பகுதி மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் போக வேண்டும் எனில், சமாதானபுரத்தை கடந்துதான் போக வேண்டும். இங்கு புனித மிக்கேல் தேவாலயம் இருக்கிறது. இன்று காவடி எடுத்துக்கொண்டு பாத யாத்திரையாக, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற மக்கள், இரவு உறங்க இடத்தை தேடிக் கொண்டிருந்த நிலையில், புனித மிக்கேல் தேவாலய நிர்வாகம், அவர்களுக்கு தங்க அனுமதி அளித்திருக்கிறது.
இதனையடுத்து காவடியுடன் வந்த பக்தர்கள், காவடியை தேவாலயத்திற்குள் இறக்கி வைத்துவிட்டு இரவு ஓய்வெடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மத நல்லிணக்க சிந்தனையை மேலும் வலுவாக்கியிருக்கிறது. இரவு தங்க இடம் கொடுத்த தேவாலய திருத்தந்தைக்கு, பக்தர்கள் நன்றி கூறியிருக்கின்றனர்.
Murugan devotees on a pilgrimage to Tiruchendur via Tirunelveli rested at St Michael’s Church in Samathanapuram. The church administration opened its doors, offering space for pilgrims to rest, highlighting communal harmony pic.twitter.com/h3v4S2W7Cw
— Thinakaran Rajamani (@thinak_) January 30, 2026
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் ஷேராக வரவேற்பை பெற்றிருக்கிறது. வழக்கமாக இந்து பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், குடிநீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்குவதும் நீடித்து வருகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் இதுபோன்ற காட்சிகளை அதிக அளவில் காண முடியும். இப்படியாக மத நல்லிணக்கத்திற்கு தேசத்திற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என பலரும் புனித மிக்கேல் தேவாலய வீடியோவை ஷேர் செய்து கூறி வருகின்றனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications