தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்! தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கிறிஸ்துமஸ் விழாவையை ஒட்டி தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. சென்னை சாந்தோம், பெசண்ட் நகர் உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாப்பூர், சாந்தோம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இன்று நள்ளிரவில் இருந்தே கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கின. கருணையே வடிவான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் மரம் வைத்து, ஸ்டார் தொங்கவிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரித்து இயேசுவின் பிறப்பை கொண்டாடுகின்றனர்.
சிறப்பு பிராத்தனைகள்
மத எல்லைகளைத் தாண்டி, அன்பு, கருணை, அமைதி ஆகிய மனிதநேய மதிப்புகளைப் பரப்பும் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாவிகளை ரட்சிக்க பாலகனாய் இயேக அவதரித்த நாள் இது. உலகத்தை இருளில் இருந்து மீட்டு, மக்களின் வாழ்வில் புதிய ஒளியை வழங்க அவதரித்தவர் இயேசு கிறிஸ்து.
நமக்காகவே பிறந்த அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள், அவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கிய நாளாக இது அமைகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனைகளில் குடும்பத்தினருடன் வந்து மக்கள் பங்கேற்றனர்.
சென்னையில் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கியதை அடுத்து உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. தமிழகத்திலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குடும்பத்துடன் குவிந்த மக்கள் பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வீடுகளில் நட்சத்திரங்களை கட்டி மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலித்தன. சென்னையில் மயிலாப்பூர், சாந்தோம், பெசண்ட் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது. சென்னை பெசண்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்னி தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வண்ண விளக்குளால் அலங்கரிப்பு
கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று இரவு முதல் நாளை இரவு வரை தேவாலயங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சாந்தோம், பெசண்ட் நகர், பாரிமுனை, சைதாப்பேட்டை, சின்னமலையில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications