Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் கொடுத்த தங்கமான அப்டேட்! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2.0.. எப்போது உங்க அக்கவுண்டுக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் 50% விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத்தொகை வேண்டிய பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என அப்டேட் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு. இதன் மூலம் கிறிஸ்துமஸ் பரிசாக பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நேரடியாக வங்கி கணக்கில் வழங்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஆனால், பலர் தகுதியுடன் இருந்தும் தொகை பெறவில்லை என குறை கூறி வந்தனர்.

இதை தீர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அனைத்து தகுதியுள்ள பெண்களும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்தார். அதற்காக தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

Kalaignar Magalir Urimai Thogai tn govt Thangam Thenarasu

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம்களில், 45 நாட்களுக்குள் மனுக்கள் ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் பாதிக்கும் மேல் மகளிர் உரிமைத் தொகை வேண்டியே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தங்கள் விண்ணப்ப நிலை குறித்து பலர் விண்ணப்பித்த பெண்கள் பலரும் குழப்பத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அரசு தற்போது கள ஆய்வை தொடங்கியுள்ளது.

கள ஆய்வு

ஒவ்வொரு விண்ணப்பமும் நேரடியாக அலுவலர்களால் சரிபார்க்கப்படும் எனவும், ஒரு நாளைக்கு சுமார் 100 மனுக்கள் பரிசீலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என அப்டேட் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு. விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

தங்கம் தென்னரசு

இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு 181 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1,537 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," 40 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கிய விதை இன்று தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களாக வேரூன்றி நிற்கிறது. தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

டிசம்பரில் உரிமைத் தொகை

விருதுநகர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 60,000 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 75 சதவிகித மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் மனுக்களில் 50 சதவிகிதம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். தகுதியுள்ள எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதால் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் வழங்குவார்." என கூறியுள்ளார். இதன் மூலம் டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக டிசம்பர் 15 தேதி வாக்கில் தகுதியுள்ள அனைவருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+