சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மர்ம மரண விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தந்தை லத்தீப்
சென்னை: சென்னை ஐஐடி (ஐஐடி மெட்ராஸ்) மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னார் சிபிஐ மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பாத்திமாவின் தந்தை லத்தீப் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 2019, நவம்பர் மாதம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் உலுக்கியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது சென்னை போலீஸ். சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷ்னர் திரிபாதியை சந்தித்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், '' எனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் '' என்று புகார் கொடுத்திருந்தார்.

மாணவர்கள் போராட்டம்
பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஐ.ஐ.டி. நிவாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்றும் குற்றச்சாட்டுகளை கூறியபடி போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்தன மாணவர் அமைப்புகள்.

சிபிஐ விசாரணை
இதற்கிடையே, பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய தமிழக அரசு. சி.பி.ஐ.யும் வழக்கை ஏற்றுக்கொண்டது.

பேராசிரியருக்கு தொடர்பு?
மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தோழிகளிடம் விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் ஒருவர், மாணவியின் மரணத்தில் தொடர்புடையவராக இருக்கிறார் என அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது. அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், விசாரணை நடத்தியதாக வெளிப்படையான தகவல்கள் வரவில்லை

இன்று தந்தையிடம் விசாரணை
இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், தற்போது வழக்கை மீண்டும் விசாரிக்க துவங்கியிருக்கிறது சி.பி.ஐ. இதற்காக, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பை தங்களின் அலுவலகத்துக்கு அழைத்திருந்தது சிபிஐ. இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் லத்தீப். இந்த வழக்கில் சி.பி.ஐ. சேகரித்துள்ள சில ஆதாரங்களின் அடிப்படையில் அப்துல் லத்தீப்பிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள அவரை சி.பி.ஐ. வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications