சினிமா பைனான்சியர் போத்ராவின் மகன் ககன் போத்ரா அதிரடி கைது.. சென்னை திநகரில் பரபரப்பு!
சென்னை: மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் நிதி நிறுவனம் மற்றும் வைர மதிப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வந்தவர் முகுந்த் சந்த் போத்ரா. இவர் சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களுக்கு வட்டிக் கடன் கொடுத்து வந்தார்.

இவருக்கு உதவியாக மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முகுந்த் சந்த் போத்ரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய மகன்கள்தான் அந்த தொழிலை கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையில் சென்னை விஜயராகவா சாலையில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார் ககன் போத்ரா. இவர் சில ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலும் வீட்டை காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து உரிமையாளர் பாலமணி பல முறை வாடகை கேட்டு கொடுக்காத நிலையில் ஒரு முறை திடீரென ககன் போத்ரா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ககன் போத்ரா மீது வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ககன் போத்ராவிடம் விசாரித்த போது இந்த வீட்டில் நான் வாடகைக்கு இருக்கவில்லை.
லீசுக்கு இருந்து வருகிறேன். 10 ஆண்டுகள் போடப்பட்டுள்ளது என கூறி ஒரு ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து அப்படி ஒரு ஒப்பந்தமே போடப்படவில்லை என வீட்டின் உரிமையாளர் மறுத்தார். இதையடுத்து ககன் போத்ரா கொடுத்த ஆவணம் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. அதில் ககன் போத்ரா சமர்ப்பித்தது போலி ஆவணம் என தெரியவந்தது. இதையடுத்து ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications