ரஜினிக்காக உருவாகும் அறிவுஜீவிகள் வட்டம்... யார் யாருக்கு அதில் இடம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் வரும் 2020-ம் ஆண்டு அரசியல் கட்சியை உறுதியாக தொடங்கும் திட்டத்தில் உள்ளதால், அவருக்காக இப்போதே அறிவுஜீவிகள் வட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது.

அந்த வட்டத்தில் தமிழருவி மணியன், பழ.கருப்பையா, எம்.ஜி.ஆர்.காலத்து சீனியர் அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.கள் என பல தரப்பினரும் இருக்கிறார்களாம்.

வரும் 2020 ஏப்ரல் மாதம் ரஜினியிடமிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என அவரது ஆதரவு வட்டத்தினர் உறுதியாக கூறுகின்றனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக கடந்த கால் நூற்றாண்டாக தமிழகத்தில் நடைபெற்று வரும் விவாதம் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. அப்போது தனது கட்சி தொடர்பாக ரஜினி அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

புதிய வட்டம்

புதிய வட்டம்

ஆனால், அதற்குள் தனக்கு ஆலோசனைகள் கூறவும், நடப்பு நிகழ்வுகள் பற்றி விவாதித்து முடிவெடுக்கவும் ஒரு அறிவுஜீவிகள் கொண்ட வட்டத்தை தன்னுடன் பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புகிறாராம் ரஜினி. இதற்கான குழுவை உருவாக்கும் பணிகள் இப்போதே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல தரப்பினர்

பல தரப்பினர்

தமிழருவி மணியன் ஏற்கனவே ரஜினியின் ஆலோசகராக உள்ள நிலையில் அதில் புதிதாக பழ.கருப்பையாவும் விரைவில் இணைய உள்ளாராம். அவர்களுடன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத சீனியர் அரசியல்வாதிகள் இருவரும் சேர உள்ளார்கள்.

காய்நகர்த்துதல்

காய்நகர்த்துதல்

அரசியலை பொறுத்தவரை திட்டமிட்டு ஒவ்வொரு காயையும் நகர்த்தினால் மட்டுமே அதில் வெற்றி சாத்தியம், எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற ரீதியில் செயல்பட்டால் அது அதளபாதாளத்திற்கே சென்று விடும். ஆகையால், ரஜினி தாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவை பற்றியும் இந்த அறிவுஜீவிகள் வட்டத்தினருடன் தீர ஆலோசித்த பின்னரே அதை பற்றி வெளிப்படுத்துவாராம்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+