சென்னையில் திடீரென பரவி வரும் காய்ச்சல்.. காரணம் என்ன தெரியுமா.. மாநகராட்சி தந்த முக்கிய தகவல்
இரவில் நீடிக்கும் குளிரும், அதிகாலையில் இருக்கும் பனியும் இந்த காய்ச்சல் ஏற்படுவதற்கு துணை போகின்றன.
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் திடீர் காய்ச்சல் மற்றும், உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து சென்னை பெரு மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி டாக்டர் எம் ஜெகதீசன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பானது மற்ற நகரங்களை விட சென்னையில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா அச்சம் நீங்கி ஒரு வருடம் ஆன நிலையிலும் சென்னை மக்கள் தொடர்ந்து அவ்வப்போது சில உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். திடீர் காய்ச்சலால் சென்னை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சல் ஒரு வாரம் வரை உடலை வாட்டி எடுத்து விடுகிறது.

இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி டாக்டர் எம் ஜெகதீசன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "தற்போது சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), அடினோ வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகிய வைரஸ்கள் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே 48 மணி நேரத்திற்கு பின்னரும் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்பவில்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெரும்பாலானோருக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை திடீரென சரிந்துவிடுகிறது. இவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சென்னையை பொறுத்த அளவில் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும். ஆனால் இது தற்போது குறைந்திருக்கிறது. அதற்கு பதிலாக வைரஸ் பாதிப்புகள் தலைதூக்கியுள்ளன. குறைந்தது 10 நாட்கள் வரை இருமல் இருப்பது மேற்குறிப்பிட்ட வைரஸின் பாதிப்புதான். சிலருக்கு உடல் சோர்வு 1 வாரம் வரையும், இருமல் 2 வாரங்கள் வரையும் நீடிக்கிறது.
பிப்ரவரியில் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் இம்மாதிரியான காய்ச்சல் வருவது பலருக்கும் வியப்பாக இருக்கலாம், ஆனால் இரவில் நீடிக்கும் குளிரும், அதிகாலையில் இருக்கும் பனியும் இந்த காய்ச்சல் ஏற்படுவதற்கு துணை போகின்றன" என்று கூறியுள்ளார். குளிர் மற்றும் மழைக்காலங்களில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் வருவது இயல்பானதுதான் என்று மருத்துவர்கள் பலர் கூறுகின்றனர். இந்த வைரஸ்கள் வானிலைக்கு ஏற்ப தங்களது மரபணுக்களை மாற்றிக்கொள்வதால் நீண்ட நாட்களுக்கு உடலை வாட்டி எடுத்துவிடுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து செல்ல வேண்டும், குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில்தான் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேபோல இது சாதாரண காய்ச்சல்தான் எனவே பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications