சென்னை: தங்க நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சிட்டி யூனியன் வங்கியின் புதிய அதிகாரி கும்பகோணத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். வங்கியின் 1,000-மாவது கிளை தொடங்கப்பட்ட கையோடு, நிர்வாக மாற்றமும் நிகழ்ந்துள்ளதால் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 29 ஆண்டு அனுபவம் கொண்ட புதிய தலைமை, வங்கியின் வளர்ச்சிப் பாதையில் எளிய மக்களுக்கான கடன் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
சிட்டி யூனியன் வங்கி (CUB) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, நிரந்தர வைப்பு நிதி (FD) திட்டங்களில் பொதுமக்களுக்கு சுமார் 5.00% முதல் 7.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% வரை உயர்த்தி சுமார் 8.00% வரையிலும் வட்டி வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிட்டி யூனியன் வங்கி CUB
333 நாட்கள் மற்றும் 444 நாட்கள் போன்ற சிறப்பு கால அவகாசம் கொண்ட வைப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமான வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும், வருமான வரிச் சலுகை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் கொண்ட 'டேக்ஸ் சேவர்' வைப்புத் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
கடன் வசதிகளை பொறுத்தவரை, தங்க நகைக் கடன், வீட்டுக் கடன் மற்றும் நுகர்வோர் கடன்களை எளிமையான நடைமுறைகளுடன் இந்த வங்கி வழங்கி வருகிறது.
தங்க நகைக் கடன், வீட்டுக் கடன்
குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் பல்வேறு வணிகக் கடன் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. கஸ்டமர்கள் தங்களின் வைப்புத் தொகையில் சுமார் 90% வரை உடனடி கடனாகவோ அல்லது ஓவர் டிராப்ட் வசதியாகவோ பெற்றுக்கொள்ளும் சலுகையும் உள்ளது... வீட்டிலிருந்து அதில் அக்கவுண்ட் திறக்கும் வசதியும் உண்டு.
எனினும், வட்டி விகிதங்கள் மற்றும் திட்ட விவரங்கள் காலத்தின்படி மாறக்கூடும். அதனால், வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சரிபார்த்து பயன்பெறுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
கும்பகோணம் பேங்க் சிஇஓ
இந்நிலையில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கியில் இப்போது ஒரு முக்கியமான மாற்றம் நடந்திருக்கிறது. கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு 1904-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, இன்று 1,000 கிளைகளைக் கடந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
கடந்த 27-ம் தேதி கூட தஞ்சாவூர் அம்மாசத்திரத்தில் தனது 1,000-மாவது கிளையைத் தொடங்கி சாதனை படைத்தது. இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், கடந்த 2013-ல் இருந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த காமகோடி. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இவரது பதவிக்காலம் இன்றோடு முடிகிறது.
வங்கியின் நுணுக்கங்கள்
காமகோடிக்கு அடுத்தபடியாக இந்த பெரிய பொறுப்பை ஏற்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், விஜய் ஆனந்த் அந்த இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்தவரான விஜய் ஆனந்த், வங்கித் துறையில் சாதாரணமானவர் கிடையாது. சுமார் 29 வருஷ அனுபவம் இவருக்கு இருக்கிறது.
வங்கியின் நுணுக்கங்களை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்தவர் என்பதால், வங்கியின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இவர் நாளை முறைப்படி தனது பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறார்.
நகைக்கடன், விவசாய கடனுக்கு முன்னுரிமை
பதவியேற்புக்கு முன்னதாகப் பேசிய விஜய் ஆனந்த், வங்கியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார். "வங்கியின் வளர்ச்சிக்கு தங்க நகைக்கடனும், விவசாயக் கடன்களும் தான் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இதுவரை சந்தித்த எத்தனையோ சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்துத் தான் இந்த உயரத்தை வங்கி எட்டியிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களும், பங்குதாரர்களும் தான் காரணம்,
தற்போது அமலில் இருக்கும் திட்டங்களில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை, பழைய திட்டங்களையேத் தொடர்ந்து கொண்டு செல்லப்போகிறோம். கஸ்டமர்களுக்கு கிடைக்கும் சேவையின் தரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்துவது தான் தனது முதல் இலக்கு" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஒரு அனுபவம் வாய்ந்த நபரின் கையில் வங்கி நிர்வாகம் ஒப்படைக்கப்படுவது, சிட்டி யூனியன் வங்கியின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய அதிகாரி வந்தவுடன் வங்கியின் திட்டங்கள் எல்லாம் மாறிவிடுமா என யோசிப்பவர்களுக்கு அவர் ஒரு தெளிவான பதிலை தந்திருப்பதும் கவனம் பெற்று வருகிறது..!!
சென்னை: தங்க நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சிட்டி யூனியன் வங்கியின் புதிய அதிகாரி கும்பகோணத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். வங்கியின் 1,000-மாவது கிளை தொடங்கப்பட்ட கையோடு, நிர்வாக மாற்றமும் நிகழ்ந்துள்ளதால் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 29 ஆண்டு அனுபவம் கொண்ட புதிய தலைமை, வங்கியின் வளர்ச்சிப் பாதையில் எளிய மக்களுக்கான கடன் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.சிட்டி யூனியன் வங்கி (CUB) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, நிரந்தர வைப்பு நிதி (FD) திட்டங்களில் பொதுமக்களுக்கு சுமார் 5.00% முதல் 7.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% வரை உயர்த்தி சுமார் 8.00% வரையிலும் வட்டி வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சிட்டி யூனியன் வங்கி CUB333 நாட்கள் மற்றும் 444 நாட்கள் போன்ற சிறப்பு கால அவகாசம் கொண்ட வைப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமான வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும், வருமான வரிச் சலுகை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் கொண்ட 'டேக்ஸ் சேவர்' வைப்புத் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.கடன் வசதிகளை பொறுத்தவரை, தங்க நகைக் கடன், வீட்டுக் கடன் மற்றும் நுகர்வோர் கடன்களை எளிமையான நடைமுறைகளுடன் இந்த வங்கி வழங்கி வருகிறது.தங்க நகைக் கடன், வீட்டுக் கடன்குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் பல்வேறு வணிகக் கடன் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. கஸ்டமர்கள் தங்களின் வைப்புத் தொகையில் சுமார் 90% வரை உடனடி கடனாகவோ அல்லது ஓவர் டிராப்ட் வசதியாகவோ பெற்றுக்கொள்ளும் சலுகையும் உள்ளது... வீட்டிலிருந்து அதில் அக்கவுண்ட் திறக்கும் வசதியும் உண்டு.எனினும், வட்டி விகிதங்கள் மற்றும் திட்ட விவரங்கள் காலத்தின்படி மாறக்கூடும். அதனால், வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சரிபார்த்து பயன்பெறுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.கும்பகோணம் பேங்க் சிஇஓஇந்நிலையில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கியில் இப்போது ஒரு முக்கியமான மாற்றம் நடந்திருக்கிறது. கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு 1904-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, இன்று 1,000 கிளைகளைக் கடந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.கடந்த 27-ம் தேதி கூட தஞ்சாவூர் அம்மாசத்திரத்தில் தனது 1,000-மாவது கிளையைத் தொடங்கி சாதனை படைத்தது. இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், கடந்த 2013-ல் இருந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த காமகோடி. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இவரது பதவிக்காலம் இன்றோடு முடிகிறது.வங்கியின் நுணுக்கங்கள்காமகோடிக்கு அடுத்தபடியாக இந்த பெரிய பொறுப்பை ஏற்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், விஜய் ஆனந்த் அந்த இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்தவரான விஜய் ஆனந்த், வங்கித் துறையில் சாதாரணமானவர் கிடையாது. சுமார் 29 வருஷ அனுபவம் இவருக்கு இருக்கிறது.வங்கியின் நுணுக்கங்களை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்தவர் என்பதால், வங்கியின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இவர் நாளை முறைப்படி தனது பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறார்.நகைக்கடன், விவசாய கடனுக்கு முன்னுரிமைபதவியேற்புக்கு முன்னதாகப் பேசிய விஜய் ஆனந்த், வங்கியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார். "வங்கியின் வளர்ச்சிக்கு தங்க நகைக்கடனும், விவசாயக் கடன்களும் தான் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இதுவரை சந்தித்த எத்தனையோ சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்துத் தான் இந்த உயரத்தை வங்கி எட்டியிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களும், பங்குதாரர்களும் தான் காரணம்,தற்போது அமலில் இருக்கும் திட்டங்களில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை, பழைய திட்டங்களையேத் தொடர்ந்து கொண்டு செல்லப்போகிறோம். கஸ்டமர்களுக்கு கிடைக்கும் சேவையின் தரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்துவது தான் தனது முதல் இலக்கு" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.ஒரு அனுபவம் வாய்ந்த நபரின் கையில் வங்கி நிர்வாகம் ஒப்படைக்கப்படுவது, சிட்டி யூனியன் வங்கியின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய அதிகாரி வந்தவுடன் வங்கியின் திட்டங்கள் எல்லாம் மாறிவிடுமா என யோசிப்பவர்களுக்கு அவர் ஒரு தெளிவான பதிலை தந்திருப்பதும் கவனம் பெற்று வருகிறது..!!Gold Loan and Agricultural Loan Now Easier! City Union Bank’s New Decision Brings Relief to Kumbakonam Customers
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.