காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் முன்பே திமுக நிர்வாகிகள் இடையே கைகலப்பாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் கடந்த முறையை போல இந்த முறையும் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரி ஒரு தரப்பும், இந்த முறை திமுகவிற்கு ஒதுக்க கோரி ஒரு தரப்பும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது.
கடந்த முறை கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

திமுக வேட்பாளர் நேர்காணல்
திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நேற்று முதல் நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கள நிலவரம் என்ன, யார் போட்டியிடலாம், யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி இன்று வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்றுவிட்டு அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்ததும் திமுக நிர்வாகிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பும் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது.
கைகலப்பாக மாறியதால் பரபரப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை காங்கிரசிடம் இருந்து திமுகவினர் பெற்றுவிட வேண்டும் என நேர்காணலின் போது முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு தரப்பு திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், இன்னொரு தரப்பினர் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை போட்டியிட எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை நாங்கள் அவரை வெற்றிபெற வைக்கவும் உழைப்போம் என்றும் மற்றொரு தரப்பு திமுக நிர்வாகிகள் சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தான் நேர்காணல் முடிந்து வெளியே வந்ததும், இரு தரப்பு திமுக நிர்வாகிகள் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications