"நீங்க 34 வயசுல செய்ததை, நான் 24 வயசுலயே .. பொங்கிய பாலாஜி.. மிரண்டு போன போட்டியாளர்கள்.. !
பாலாஜி - ஆரி இடையே மோதல் வெடித்தது
சென்னை: "நீங்க 34 வயசுல செய்ததை, நான் 24 வயசுலயே சாதிச்சிட்டேன்" என்று பாலாஜியின் ஆக்ரோஷமான பேச்சுதான், அவருக்கு ஆகபெரும் மைனஸாக இந்த பிக்பாஸ் வீட்டில் நிகழ போவதாக நெட்டிசன்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
மூர்க்கத்தனமும், முரட்டுத்தனமும் நிறைந்த பாலாஜி, அப்படிதான் தன்னை ஆரம்பத்தில் ஃபோகஸ் செய்து கொண்டார்.. நடுநடுவே ஷிவானியுடன் ரொமான்ஸிலும் ஈடுபட்டு வந்தார்.. எதிர்பார்த்தபடியே புரோமோவில் இடம் பிடித்தார்.. முக்கியமான போட்டியாளராகவும் உருவெடுத்தார்.

அதேபோல, ஆரியை எடுத்து கொண்டால் பெரும்பாலான ரசிகர்கள் இவருக்குதான் இருப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.. சமூக அக்கறை, விளையாட்டை சரியாக விளையாடுகிறார்.. நாகரீக வார்த்தைகளை பயன்படுத்துகிறார், பெரிதாக சர்ச்சை, பிரச்னையில் சிக்கவில்லை என்ற குட்புக்கில் ஸ்டிராங்காக இருக்கிறார்.
அதேசமயம், எப்ப பார்த்தாலும் ஸ்டிக்ரிக்கட்டாக இருக்கிறார், கலகலப்பு இல்லை, எல்லாத்துக்கும் ரூல்ஸ் பேசுகிறார் என்ற பேச்சும் உள்ளது.. இது பல சமயங்களில் சக போட்டியாளர்களுக்கு எரிச்சலையும், சோர்வையும் தந்துவிடுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆரி - பாலாஜி இடையே நேற்று சண்டை வந்துவிட்டது.
வீட்டு வேலைகளை சுணக்கமின்றி செய்வதில்லை என்று பாலாஜி மீது ஆரி குற்றச்சாட்டை வைக்கவும், பொங்கி எழுந்துவிட்டார் பாலாஜி.. யார் சோம்பேறி, நானா? வாடா போடான்னு பேசாதீங்க.. என்னை பார்த்து கை நீட்டி பேசாதீங்க.. ஒரு அளவுக்குதான் மரியாதை தருவேன்.." என்று பொங்கிவிட்டார். ஆனால், ஆரியோ, கூலாக படுத்து கொண்டே பாலாஜியிடம் குறைகளை சொல்ல, பாலாஜியோ, நின்றுகொண்டே கரகம் ஆகிவிட்டார்..
மேலும் தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தி விட்டார்.. இதுவும் ஆரியின் ஒரு டெக்னிக்தான் என்கிறார்கள்.. பாலாஜிக்கு பிடிக்காது என்று தெரிந்தும் வாடா, போடா என்று பேசி அவரை உசுப்பேத்தி, அதன்மூலம் வார்த்தைகளை பிடுங்கி எளிதாக பாலாஜியை கெட்டவராக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.. இந்த சூட்சுமத்தை பாலாஜியும் புரிந்து கொண்டு, கொஞ்சமாவது முதிர்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அதேசமயம், ஆரி, தான் படுத்த படுக்கையை கூட சரியாக மடிப்பதில்லை.. காய்ந்த துணிகளை எடுப்பதில்லை... சாப்பிட்ட பழங்கள் அப்படியே டேபிளில் அழுகி போய் கிடக்கின்றன என்று பாலாஜி சொன்ன அனைத்தையுமே கேமிராவில் காட்டப்பட்டன.. இது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. எப்போதுமே ரூல்ஸ் பேசும், ஆரியா இப்படி இருக்கிறார் என்ற அதிர்ச்சியை அது ஏற்படுத்தியது.
அதேபோல, பாலாஜியை வெளியேற்ற வேண்டும் அல்லது ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் வலியுறுத்தி வருகிறார். எப்படியோ இந்த விவகாரம் வரும் சனிக்கிழமை வரை ஓடும்போல தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications