பத்ம விருதுடன் சென்னை வந்த பிரேமலதா.. பேரணியாக செல்ல முயற்சி! போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம்
சென்னை: விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதுடன் இன்று சென்னை திரும்பினார் பிரேமலதா விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரேமலதாவுடன் பேரணியாக செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசு சார்பில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன. கடந்த ஜனவரியில் விருது பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
விஜயகாந்த் மறைந்த நிலையில் மத்திய அரசு தந்த பத்ம பூஷன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்தார். இந்த விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி சுதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில், விஜயகாந்த்துக்கான பத்ம பூஷன் விருதுடன் இன்று சென்னை வந்தடைந்தார் பிரேமலதா விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கூடி, பத்ம பூஷன் விருதுடன் வந்த பிரேமலதாவை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டார் பிரேமலதா விஜயகாந்த். திறந்தவெளி வாகனத்தில் பிரேமலதா, பத்மபூஷன் விருதைக் காட்டியபடி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேமுதிகவினர் தங்கள் வாகனங்களில் பேரணியாகச் செல்லக் கிளம்பினர்.
சென்னையில் அனுமதியின்றி விமான நிலையத்தில் இருந்து பிரேமலதாவுடன் பேரணியாக செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கோரி பேரிகார்டு போட்டு தடுத்தனர். இதனால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் திறந்தவெளி வாகனப் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல மாட்டோம் என தேமுதிகவினர் மறுப்பு தெரிவித்தனர்.
பத்ம விருதுடன் தமிழ்நாடு திரும்பி இருக்கும் தன்னை போலீசார் இவ்வாறு தடுக்கக்கூடாது என பிரேமலதா போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து நீண்ட நேரம் நடந்த வாக்குவாதம் நடந்தது. பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்து, வாகனப் பேரணியாகச் செல்ல முயன்றவர்களை பேரிகார்டு போட்டு தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications