அதிமுக அலுவலக கொள்ளை..ஓபிஎஸ் மீது புகார்..ஆவணங்களை மீட்டுத்தர ஈபிஎஸ் கோரிக்கை
அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்ற ஆவணங்களை மீட்டுத்தரக்கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் எடுத்துச்சென்ற ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்துள்ளார்.
அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் நேற்றைய தினம் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே மோதல் மூண்டது. ஒருவரை ஒருவர் கற்களை வீசியும் கட்டைகளைக் கொண்டும் தாக்கிக்கொண்டதால் அந்த பகுதியே போர்களமாக காட்சியளித்தது.
வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் குவிந்திருந்தனர். அதே நேரத்தில் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆவணங்கள் கொள்ளை
அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர் செல்வத்தை விடாமல் சிலர் தடுக்க அதையும் மீறி பூட்டினை உடைத்து கதவை பூட்டினர். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பூட்டினை உடைத்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் எடுத்துச்சென்றனர்.

வரலாறு காணாத வன்முறை
கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்
அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர் செல்வத்தை விடாமல் சிலர் தடுக்க அதையும் மீறி பூட்டினை உடைத்து கதவை பூட்டினர். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பூட்டினை உடைத்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி கொதிப்பு
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, வானகரத்தில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் செல்ல வாய்ப்பு உள்ளது என தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சி 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும் பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ரவுடி கும்பல்
கட்சியின் நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டிய ஓபிஎஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர், முதல்வர் என பதவிகளை வழங்கிய நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இன்று வெகுமதியை தந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 மீன்பாடி வண்டியில் கற்களை எடுத்து வந்து ரவுடிகள் நிர்வாகிகளை தாக்கி உள்ளனர்.

ஆவணங்கள் கொள்ளை
எனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என நினைப்பார். காவல்துறை பாதுகாப்போடு வாகனத்தில் அதிமுகவின் ஆவணங்களை அள்ளி சென்றுள்ளார். இது எவ்வளவு கேவலம். காலம் மாறும், யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். நீதிமன்றத்தின் மூலமாக நியாயத்தை பெற்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்படும். 98% பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். எனவே அதிமுக எங்களுடன் வலிமையாக உள்ளது. ஓபிஎஸ் செயல் கேவலமாக உள்ளது என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓபிஎஸ் மீது புகார்
இதனிடையே அதிமுக அலுவலகத்தில் பூட்டுக்களை உடைத்து சேதப்படுத்தி அத்துமீறி நுழைந்ததாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்துள்ளார். வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்துச் சென்ற ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications