தூய்மை கடற்கரை பட்டியல்.. முதலிடத்தில் சென்னை பெசன்ட் நகர்.. 2வது இடத்தில் மெரினா.. முழுபட்டியல்!
சென்னையில் உள்ள கடற்கரையில் தூய்மை தொடர்பான பட்டியலில் பெசன்ட் நகர் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மெரினாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ள நிலையில் கடைசி இடத்தில்
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் தூய்மையாக பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தமட்டில் சென்னை கடற்கரையை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் தூய்மையான கடற்கரைப் பகுதியாக பெசன்ட் நகர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் மெரினா பிடித்துள்ள நிலையில் கடைசி இடத்தில் நீலாங்கரை பிடித்துள்ளது.
உலகில் மிகவும் நீளமான 2வது கடற்கரையாக சென்னை உள்ளது. இங்கு மொத்தம் 7 கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளன. மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர், நீலங்கரை, பாலவாக்கம், அக்கரை ஆகிய 7 கடற்கரைக்கும் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக இந்த கடற்கரைகள் உள்ளன. மேலும் காலை, மாலையில் நடைபயிற்சி செல்வதற்கும் பலரும் கடற்கரை பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.

கடற்கரை பகுதிகளை பாதுகாக்க..
இந்நிலையில் தான் இந்தியா முழுவதும் கடற்கரையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்து கொண்டால் கடல்நீர் மாசடைவது குறையும். அதோடு ஏராளாமான சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே கடற்கரை பகுதிகளை பாதுகாப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னையை பொறுத்தமட்டில் 7 கடற்கரை பகுதிகளையும் குப்பைகள் இன்றி தூய்மையாக பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிஸ்க் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமீறும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தரவரிசை பட்டியல்
அதோடு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், கடற்கரை பகுதிகளில் உள்ள தூய்மையின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதோடு, அங்கு பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், அதிகாரிகள் பாராட்டப்பட்டு வருகின்றனர்.

பெசன்ட் நகர் முதலிடம்
அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி உள்ள பட்டியலில் தூய்மையான கடற்கரை பட்டியலில் சென்னை பெசன்ட் நகர் முதலிடத்தில் உள்ளது. கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த மெரினா கடற்கரை தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதையடுத்து 2வது இடத்தில் திருவான்மியூர் கடற்கரை, 4வது இடத்தில் திருவொற்றியூர், 5வது இடத்தில் பாலவாக்கம், 6வது இடத்தில் அக்கரை உள்ளது. கடைசி மற்றும் 7 வது இடத்தில் நீலங்கரை கடற்கரை உள்ளது.

பெற்ற புள்ளிகள் எவ்வளவு?
இந்த பட்டியலில் பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகள் பெற்றது. மெரினா 98.1 புள்ளிகளும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளும், திருவொற்றியூர் 91 புள்ளிகளும், பாலவாக்கம் 81.36 புள்ளிகளும், அக்கரை 73.68 புள்ளிகளும், நீலாங்கரை 71.67 புள்ளிகளும் பெற்றுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications