கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாம்பரம் வரை நாளை சிறப்பு மின்சார ரயில்
சென்னை: தென் மாவட்டம், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில் நாளை இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை விடப்பட்டது. அதேபோல், அதற்கு அடுத்த நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், பயணிகள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டது.

அலைமோதும் கூட்டம்: அதேபோல், சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்கியது. தற்போது வார விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்பி வருவதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் ரயில் நிலையங்களில் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன.
சிறப்பு பேருந்துகள்: பொதுப் பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை ரயில் நிலையத்திலும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறியதை பார்க்க முடிந்தது. அதேபோல், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலான பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் பேருந்தில் இடம் பிடிக்க போய் ஏமாந்து வருவதையும் காண முடிந்தது.
பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. உடன்குடி, திசையன்விளை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 1,700 - 2,500 வரை சாதாரண பஸ்களிலேயே டிக்கெட் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
9 சிறப்பு மின்சார ரயில்: சொந்த வாகனங்களில் சென்னை திரும்பி வருவதால் சுங்கச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நாளை காலை வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் சென்னை நகருக்குள் சிரமின்றி வருவதற்காக கூடுதல் மின்சார ரயில்களை இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: -
காட்டாங்குளத்தூர் - தாம்பரம்: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு மின்சார ரயில் நாளை இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு காலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும், காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு காலை 4.40 மணியில் இருந்து 10.05 மணி வரையிலும் 30 நிமிட இடைவெளியில் 9 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்: அதேபோல், திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இரவு 11 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு காலை 7.30 மணிக்கு வந்து சேரும்.
திருவெறும்பூர், படலூர், தஞ்சாவூர்,பாபநாசம், கும்பகோணம்,மயிலாடுதூறை, வைத்தீஸ்வரம் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர்,விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவர், மதுராந்தகர்ம், செங்கல்பட்டு,காட்டாங்களத்தூர், பொத்தேரி, தாம்பரம்,மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்












Click it and Unblock the Notifications