கண்டா வரச்சொல்லுங்க.. சென்னையில் கண்ணாமூச்சி ஆடும் சூரியன்.. சட்டென குறைந்த சூரிய ஒளி நேரம்! ஏன்?
சென்னை: சென்னையில் சூரிய ஒளி நேரம் வெகுவாக குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த சம்பவம் நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள், வானிலை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே IITM மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இணைந்து நடத்திய புதிய ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சூரிய ஒளி நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று பத்தாண்டுகளில், மேகமூட்டம் அதிகரிப்பதாலும், வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் அதிகமாகச் சேர்வதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே IITM மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இணைந்து நடத்திய புதிய ஆய்வு, 'நேச்சரின் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் வெளியானது. இந்த ஆய்வில், வட இந்திய சமவெளிப் பகுதிகளில் ஆண்டுக்கு 13.1 மணிநேரம் சூரிய ஒளி குறைந்து, மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை உட்பட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் 4.9 மணிநேரம் சூரிய ஒளி குறைந்துள்ளது. நீடித்த பருவமழையும், அதிகரித்து வரும் மாசுவும் நாட்டின் சூரிய ஒளியைக் குறைப்பதே இதற்குக் காரணம் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. முக்கியமாக சென்னையில் இது வெகுவாக குறைந்து உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சூரிய ஆற்றல் குறைவு
சூரியப் பலகைகள் மீது விழும் சூரியக் கதிர்வீச்சை வைத்து இந்த கணக்கீடு செய்யட்டும். இந்தியாவில் 2018 முதல் 2022 வரை சராசரியை விட 7% குறைவாகவும், 2024 ஆம் ஆண்டில் 3% முதல் 10% வரையிலும் சூரியக் கதிர்வீச்சு மாறுபாடுகள் பதிவாகியுள்ளன. 2025ல் இது மேலும் குறையும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சூரிய ஆற்றல் குறையும் இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, காலநிலைமாற்ற அபாயத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற மாற்றங்கள், அபாயங்கள் ஏற்பட வாயப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றம்
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications