Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷாரா இருங்க.. 15 வருஷத்தில் மயிலாப்பூர் கடலாக மாறகூடும்... எச்சரிக்கும் சௌமியா அன்புமணி

புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்ந்தால் 15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம் உள்ளது என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் 15 ஆண்டுகளில் தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது. இதற்கெல்லாம் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்ந்தால் 15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி மற்றும் பசுமைத் தாயகம் இணைந்து நடத்திய 'காலநிலை அவசரநிலை மற்றும் செயல் திட்டம்' என்ற கருத்தரங்கில், புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்ந்தால் 15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம் உள்ளது என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.-யுமான அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி. இவர் பசுமையத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும், பசுமைத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

சௌமியா அன்புமணி தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, மரம் வளர்த்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள ராணி மேரிக் கல்லூரியும் பசுமைத் தாயகமும் இணைந்து, 'காலநிலை அவசரநிலை மற்றும் செயல் திட்டம்' என்ற கருத்தரங்கத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடத்தின.

காற்று மாசு

காற்று மாசு

இந்த கருத்தரங்கில்,பேசிய டாக்டர் சௌமியா அன்புமணி, இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கார்பன் டையாக்சைடு வெளியேறுகிறது. இதனால், காற்று மிக கடுமையாக மாசடைகிறது. புவி வெப்பம் அடைகிறது.

மயிலாப்பூர் கடலாகும்

மயிலாப்பூர் கடலாகும்

புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்வதால், உலகம் தற்போது எட்டியுள்ள புவி வெப்பத்தைவிட மேலும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 30 ஆண்டிற்குள் மாலத்தீவு என்ற தீவு முற்றிலும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதேபோல, புவி வெப்பம் அதிகரித்து கடல் மட்டம் உயர்ந்தால், இன்னும் 15 ஆண்டுகளில் நாம் தற்போது நிற்கும் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயமும் உள்ளது. அதனால், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று எச்சரித்தார்.

நிலத்தடி நீர் பற்றாக்குறை

நிலத்தடி நீர் பற்றாக்குறை

தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி, "2 ஆண்டுகளில் தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது. இதற்கெல்லாம் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம். முந்தைய காலத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்த பகுதிகளில் தற்போது 800 அடிக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் நிலத்தடி நீர் பற்றாக்குறை மற்றும் புவி வெப்பமும் தான். காலம் தாழ்த்தாமல் உடனடியாக காலநிலை அவசரநிலையை அமல்படுத்த வேண்டும்." என்று கூறினார்.

மாற்று வழி தேவை

மாற்று வழி தேவை

மேலும், அனைவரும் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வாழ்க்கை முறையை முற்றிலுமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நிலக்கரி, பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்தார். "அனைவரும் சோலார் போன்ற மாற்று வழியை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். அண்டை நாடுகளில் பொது போக்குவரத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே நிலையை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதினால் காற்று மாசு குறைந்து புவி வெப்பமும் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. காலநிலை மாற்றம் மட்டுமல்லாமல் மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தீய வழிகளை தகர்த்து, போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும்." என்று சௌமியா அன்புமணி கூறினார்.

அன்புமணி ராமதாஸ் அறிக்கை

அன்புமணி ராமதாஸ் அறிக்கை

இதனிடையே அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவுக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே உலகம் பேரழிவுகளை சந்திக்கும் என்றும் ஐ.நா. காலநிலை மாற்ற அமைப்பு எச்சரித்திருக்கிறது. உலகம் முழுவதும் புவியைக் காப்பதற்கு ஆதரவான குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த புரிதலும், அக்கறையும் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது கவலையளிக்கிறது.

காலநிலை மாற்றம் 2022

காலநிலை மாற்றம் 2022

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental Panel on Climate Change - IPCC) என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு 'காலநிலை மாற்றம் 2022: காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துதல்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. 65 நாடுகளைச் சேர்ந்த 278 விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்துள்ள அந்த அறிக்கையில் மிகவும் கசப்பான உண்மைகள் இடம் பெற்றுள்ளன. உலகைக் காக்க வேண்டுமானால், கரியமில வாயு வெளியேற்றப்படும் அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்பது தான் அந்த உண்மையாகும்.

கரியமில வாயு

கரியமில வாயு

2010-19 இடையிலான பத்தாண்டுகளில் வெளியான கரியமில வாயு அளவு தான் வரலாறு காணாத உச்சம் ஆகும். 1850 முதல் 2009 வரையிலான 160 ஆண்டுகளில் 1990 ஜிகா டன் கரியமில வாயு வெளியேற்றப்பட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில், 410 ஜிகா டன், அதாவது அதற்கு முந்தையை 160 ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டதில் ஐந்தில் ஒரு பங்கு வெளியேற்றப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தையும், அதன் விளைவான புவிவெப்பநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டுமானால் 2020 முதல் இனிவரும் ஒட்டுமொத்த எதிர்காலத்திலும் 410 ஜிகா டன் கரியமில வாயுவை மட்டும் தான் வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா. வல்லுனர் குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலம் என்ன?

எதிர்காலம் என்ன?

ஆனால், ஒட்டு மொத்த எதிர்காலத்திலும் வெளியேற்ற வேண்டிய அளவு கரியமில வாயுவை கடந்த பத்தாண்டுகளில் வெளியேற்றியிருக்கிறோம் என்பதிலிருந்தே, கரியமில வாயு வெளியேற்றத்தை எந்த அளவுக்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதை 2025ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தி, அதன் பிறகு குறையச் செய்ய வேண்டும்; 2030ஆம் ஆண்டில் இது 2010-ஆம் ஆண்டின் அளவை விட 45% குறைவாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் பூஜ்யமாகவும் குறைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் உலகம் அழிவதை கட்டுப்படுத்த முடியும். உலக நாடுகள் நினைத்தால் இது சாத்தியமாகக் கூடிய பணி தான்.

 புவி வெப்பநிலை

புவி வெப்பநிலை

புவிவெப்பநிலை அதன் இயல்பான அளவிலிருந்து இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதை 1.5%க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாரிஸ் உடன்பாட்டின் மையக்கரு ஆகும். ஆனால், 2021 கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றினால் கூட வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இது ஆபத்தானது.
நிலக்கரி& பெட்ரோலியப் பயன்பாட்டை குறைத்தல், அனைவருக்கு தூய ஆற்றல் கிடைக்கச் செய்தல், நகரமயமாக்கலை மாற்றியமைத்தல், வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துதல், கட்டடங்கள் அமைக்கும் முறையில் மாற்றம், போக்குவரத்தில் மாற்றம், தொழிற்சாலைகளை தூயமுறைக்கு மாற்றுதல், நிலப்பயன்பாட்டில் மாற்றம் ஆகியவற்றை உடனடியாக செய்தால் மட்டும் தான் பேரழிவை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஐநா நீடித்த இலக்குகளை அடைதல்; மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துதல்; வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.

பேரழிவு

பேரழிவு

ஐ.நா.அமைப்பின் இந்த வழிகாட்டுதலை பின்பற்றத் தவறினால் பேரழிவிலிருந்து நாம் தப்ப முடியாது. புவிவெப்பமயமாதல் காரணமாக நாம் எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு ஆகியவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இதை தடுப்பதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனடியாக அறிவித்து, அதன்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது தான் என்பதை அரசுகள் உணர வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இதை செய்ய வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், காலநிலை மாற்ற அவசர நிலை இன்னும் அறிவிக்கப்பட வில்லை. உலக அளவில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகளும் 2100 நகராட்சிகளும் காலநிலை மாற்ற அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்கக்கூடாது. எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையும், அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சிகளும், பொது அமைப்புகளும், பெரு நிறுவனங்களும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனே பிறப்பிக்க வேண்டும்; புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+