கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? கவலை இருக்கா?.. திமுகவிடம் எடப்பாடி கேட்ட அதே கேள்வி.. தினகரன் நறுக்
டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் கொரோனாதொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பது குறித்து தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்... அத்துடன், மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா? என்றும் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...
கடந்த 24 மணி நேரத்தில் 1,54,912 மாதிரிகள் டெஸ்ட் செய்யப்பட்டதில், 28,561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பாதிப்பு
மொத்த தொற்று எண்ணிக்கை பாதிப்பானது 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.. பாதிப்பு விகிதம் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது... சென்னையில் தொற்று அதிகமாகவே காணப்படுகிறது.. தொடர்ந்து புதிய தொற்று அதிக அளவில் பதிவாகி கொண்டே இருக்கிறது.. நேற்று ஒரே நாளில் 7520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,112 ஆக உயர்ந்துள்ளதுடன், தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,79,205 ஆகவும் உயர்ந்துள்ளது.

கட்டுப்பாடுகள்
இந்த தொற்று உயர்வு காரணமாகத்தான் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. எனினும், டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கி கொண்டுதானிருக்கிறது.. தொற்று பற்றிய கவலை இல்லாமல், டாஸ்மாக்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.. இனி அடுத்தடுத்த காலங்களில் தொற்று உயரும் என்று எச்சரிக்கை வந்து கொண்டிருக்கும்நிலையில், டாஸ்மாக்கை திறந்து வைத்திருப்பது நியாயமா என்றும் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

3 ட்வீட்கள்
அப்படி ஒரு கேள்வியைதான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.. இது சம்பந்தமாக அடுத்தடுத்து 3 ட்வீட்களை பதிவிட்டு, திமுக அரசை கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அதில், "நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது இவ்வளவுக்கு பிறகும் எத்தனையோ பேர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தி.மு.க. அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. இதுபோலவே, 2 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கேட்டிருந்தார்.. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications