டக்குன்னு எடப்பாடி தெருவில் இறங்கி நடந்த ஸ்டாலின்.. ஒரே நாளில்.. 2 இடங்களில் நடந்த ஆச்சரியம்..!
எடப்பாடி தொகுதியில் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் ஸ்டாலினும் ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்தது தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் களம் சூடாகி வரும் நிலையில், தலைவர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.. இவ்வளவு நாள் இருந்த பிரச்சாரங்களையும் தாண்டி, இப்போது புது பாணியை திமுக தலைவரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மேற்கொண்டுள்ளனர்.

முதல்வர்
விவசாயி முதல்வர், ஹைடெக் முதல்வராக மாறி பிரச்சாரம் செய்து வருகிறார்.. இந்த பிரச்சாரத்தை அதிமுகவிலேயே ஏன், மற்ற கட்சிகளை விட முதன்மையாக தொடங்கியது எடப்பாடியார்தான்.. தன்னந்தனியாகவே தமிழகத்தில் முழக்கமிட்டு வருகிறார்.. அந்த வகையில் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். எங்கே சென்றாலும் ஸ்டாலினை அட்டாக் செய்து பேசி வரும் முதல்வர், ஸ்டாலினின் சொந்த தொகுதிக்கே வந்ததும் லிஸ்ட் போட்டு குற்றஞ்சாட்ட ஆரம்பித்தார்..

ஊழல்
"அதிமுக ஊழல் செய்ததுன்னு போற இடமெல்லாம் சொல்லிட்டு இருக்காரே.. இருக்கட்டும்.. இதே கொளத்தூருக்கே நான் வர்றேன்.. ஸ்டாலினும் வரட்டும்.. ஒரு மேடை போடுங்க.. 2 பேரும் மைக் பிடித்து பேசறோம்.. எங்கே ஊழல் நடந்ததுன்னு சொல்லட்டும்... நான் விளக்கம் தர்றேன்.. நீங்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்லுங்க.. அதேமாதிரி அவங்களும் கேட்கட்டும்.. நாங்க பதில் சொல்றோம்" என்றார்.

அசத்தல்
இவர் இப்படி என்றால், நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் ஒரே நாளில் ஸ்டாலின் கலக்கிட்டார். முதல்வரை எதிர்த்து போட்டியிடும் சம்பத் குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.. வேனில் நின்று பேசுவார் என்று பார்த்தால், எடப்பாடி தெருக்களில் நடக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். கிட்டத்தட்ட 3, 4 பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றார்.. பிறகு எடப்பாடி ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.. கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார்.. மறுபடியும் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்.

திடீர் விசிட்
இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், எடப்பாடி தொகுதியின் தெருக்களில் ஸ்டாலின் நடந்து செல்வது என்பது திடீர் பிளானாம்.. யாருக்குமே ஸ்டாலினின் இந்த வியூகம் தெரியாதாம்.. ரோட்டில் ஸ்டாலினை பார்த்தபிறகுதான் எடப்பாடி மக்கள் ஆச்சரியப்பட்டுள்ளார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் இப்படி ஒரே நாளில், அவரவர் தொகுதிகளை மாற்றி பிரச்சாரம் செய்தது மக்களுக்கு புதுசாக தென்பட்டது..!
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications