எல்லாரும் சிடுசிடு.. ஆனால் பழனிசாமி மட்டும் எப்பவும் புன்னகைதான்.. சொன்னது யார்னு பாருங்க கோப்பால்!
எடப்பாடி பழனிசாமி சிறந்த முதல்வர் என நடிகை சரோஜாதேவி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: "எல்லாரும் சிடுசிடுவென இருப்பார்கள்... ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும் எப்பவுமே புன்சிரிப்புடன் இருக்கிறார்" என்று நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரசுவதி சரோஜா தேவி. இவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர். எனினும் எந்த அரசியல் விவகாரங்களிலும் தலையிட மாட்டார்.
யார் முதல்வராக இருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பாசமும், அன்பும் கலந்தே உறவை வளர்த்தவர். இந்நிலையில், நேற்று சரோஜா தேவி சென்னையில் நடந்த 14வது திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இதுவே முதல்முறை
பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மெழுகு சிலையையும் திறந்து வைத்து பேசினார். இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல்முறை. பின்னர், சிறப்புரையாற்றிய நடிகை சரோஜாதேவி பேசியதாவது:

புன்சிரிப்பு
"நான் இதுவரை எத்தனையோ முதல்வர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள்.

சந்தோஷமாக இருக்கிறது
கலைஞர்களை மதிப்பவராக, கலைஞர்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என நினைத்து, செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்.

எம்ஜிஆர் மாதிரி
அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும். எம்ஜிஆர் மாதிரி, ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும், அவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்யவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
-
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications