"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
அமித்ஷாவிடம் முதல்வர் தரப்பில் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது
சென்னை: மொத்தம் 2 விஷயங்கள் முதல்வர் தரப்பில் அமித்ஷாவிடம் முன்வைக்கப்பட, அந்த இரண்டிற்குமே நல்ல பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. கிட்டத்தட்ட 75 நிமிஷம் இவர்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அப்போது சீட் உடன்பாடு, சீட் பங்கீடு, சசிகலா விடுதலை பற்றின பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. பாஜக 60 சீட் கேட்டதற்கு 34 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று முதல்வர் தரப்பு சொல்லி உள்ளதாக தெரிகிறது.

2 விஷயங்கள்
எனினும் முதல்வரின் டெல்லி பயணம் 2 விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.. முதல்வர் அமித்ஷாவிடம் பேசும்போது, சசிகலாவின் வருகையை பற்றியே அதிகம் பேசினாராம்.. அதற்கு காரணம், அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான சில குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன... யாரெல்லாம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்களோ, அவர்களை உடனடியாக கண்டித்து வருகிறாராம் எடப்பாடியார்.

சசிகலா
பாஜகவும் சசிகலா புராணத்தை பாடுவதால், சசிகலாவுக்கு ஆதரவான எந்த அரசியல் நடவடிக்கையையும் பாஜக மேற்கொள்ள வேண்டாம் என்று அமித்ஷாவிடம் முதல்வர் தரப்பு கேட்டு கொண்டதாம். ஆனாலும், அவருடன் இணைத்து தேர்தலை சந்தித்தால், திமுகவை வீழ்த்த முடியும் என்று அமித்ஷா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம்.. இதுதான் எடப்பாடியாருக்கு நெருடலை உண்டு பண்ணி உள்ளது.. அமித்ஷாவின் இந்த பேச்சை அவர் ஏற்று கொள்வாரா என்று தெரியவில்லை..

புதிய சிக்கல்
சசிகலா வந்தால், அதிமுகவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று சந்தேகம் ஏற்கனவே உள்ள நிலையில், பாஜகவின் வலியுறுத்தல் முதல்வருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் சூழலுக்கு வந்துள்ளது. சசிகலா அதிமுகவில் இணைய நேர்ந்தால், அதை எப்படி முதல்வர் எதிர்கொள்வார் என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.

வேட்பாளர் விவகாரம்
அடுத்ததாக, முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி எடப்பாடி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.. ஆனால், முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தரப்பு இப்போது வரை இறுதி செய்யாமல் உள்ளது... சீட் விவகாரத்திலேயே உடன்பாடு எட்டப்படாததால், மறுபடியும் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. சீட் விஷயத்தில் முடிவு வந்தால்தான், முதல்வர் வேட்பாளர் விவகாரத்துக்கும் ஒரு முடிவு கிட்டும்.. ஆனால், பாஜக அமைதியாக இருப்பதை பார்த்தால், கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்திவிடுமோ என்று எடப்பாடியார் தரப்பு கருதுகிறதாம்.

இன்று சந்திப்பு
அதனால்தான் மீண்டும் மீண்டும் முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சை வலியுறுத்தி உள்ளார். இன்று நடக்கும் பேச்சுவார்த்தையிலாவது சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. பிரதமருடனான சந்திப்பில் நிலுவை நிதி, நதிகள் இணைப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினாலும், சசிகலா பற்றியோ, அல்லது முதல்வர் வேட்பாளர் விவகாரம் பற்றியோ ஆலோசனை நடத்தப்படுமா? என்று இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications