சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பா அர்த்தம் பண்ணிட்டு.. குடும்பத்தோட டூர் போயிராதீங்க.. முதல்வர் போட்ட செம டிவீட்!

முதல்வர் விழிப்புணர்வு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: லீவு அறிவிக்கவும் யாரும் குடும்பத்துடன் டூர் எங்கியும் போய்விடாதீர்கள் என்று முதல்வர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. இந்த அறிவிப்புக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் ஏகப்பட்ட சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்!

Recommended Video

    கொரோனாவிற்கு எதிராக கம்பம் போலீசாரின் மிமிக்ரி மூலம் நூதன விழிப்புணர்வு - வீடியோ

    கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கூடும் இடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், போன்றவை வருகிற 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பது குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

    புதுச்சேரியிலும் புகுந்தது கொரோனா.. மாஹேவில் மூதாட்டிக்கு பாதிப்பு.. தீவிர சிகிச்சை புதுச்சேரியிலும் புகுந்தது கொரோனா.. மாஹேவில் மூதாட்டிக்கு பாதிப்பு.. தீவிர சிகிச்சை

    ட்வீட்

    ட்வீட்

    இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியார் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்... அதில், "கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாக கருதி வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

     ரேஷன் கடை

    ரேஷன் கடை

    இதை பார்த்ததும் ட்விட்டர்வாசிகளுக்கு நிறைய டவுட் வந்துவிட்டது.. "பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இதர பொருட்களை வழங்கிய தமிழக அரசே... அதே ரேசன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அல்லது இலவசமாக முக கவசத்தை வழங்க முடியாதா? இங்கு முக கவச தட்டுப்பாடு நிலை வந்துள்ளது.. அதிக விலைக்கு விற்கப்படுகிறது.." என்று நியாயமான ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார் ஒருவர்.

    கோயம்பேடு

    கோயம்பேடு

    மற்றொருவர், "நாடு நாடாக சுத்துனவரே வீட்டோட இருக்காரு... அவரை பார்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தமிழக மக்கள்" என்றும் "சார்..நான் ஒரு அன்றாடம் காய்ச்சி....கோயம்பேட்டுக்கு வியாபாரம் பண்ண காய் வாங்க போகலாங்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

     தனியார் நிறுவனங்கள்

    தனியார் நிறுவனங்கள்

    "ஐயா தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் ஏசியில் இயங்குவதாலும் அதன் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதாலும் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. தாங்கள் இதனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்", "சன்டீவி கேடீவில்ல நல்ல படமாச்சும் போட்டு விட சொல்லுங்க.. புள்ள குட்டிய்ய சமாளிக்க முடில😭😭" என்கிறார்.. மற்றொருவர், "அப்டியே இந்த பிரைவேட் கம்பனியும் மூட சொன்னா நல்லா இருக்கும்🙏😔🙁" என்று பலரும் வேண்டுகோள்களை விடுத்தபடியே உள்ளனர்.

     அக்கறை

    அக்கறை

    ஆனால் முதல்வரின் டிவீட்டில் ஒரு மேட்டரை எல்லோரும் மறந்துட்டாங்க.. சட்டசபைக் கூட்டத்தில் அனல் பறந்து கொண்டுள்ள இந்த நிலையில் முதல்வர் போட்ட இந்த லேசான நகைச்சுவையும் பொறுப்புணர்வும் கலந்த டிவீட் முதல்வருக்கு நம்ம மக்களின் மீதுள்ள அக்கறையை அலேக்காக வெளிப்படுத்தியுள்ளது என்பதுதான் அது.

    English summary
    coronavirus precautions: cm edapadi palanisamy tweet about corona virus fear
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X