இதான் எடப்பாடியார்.. டென்ஷனை ஏற்றிய பாஜக.. பிரஷர் கொடுத்த பாமக.. சூப்பராக பேலன்ஸ் செய்து.. சபாஷ்!
எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகள் தந்த அழுத்தத்தை சமாளித்துள்ளார்
சென்னை: பாஜக ஒரு பக்கம், பாமக ஒரு பக்கம் ஏகப்பட்ட அழுத்தங்களை தந்தாலும் சரி.. அசராமல் நின்று கெத்தாக கூட்டணி குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
அதிமுகவை பொறுத்தவரை கொங்கு மண்டபத்தில் படுஸ்டிராங்காக உள்ளது.. ஏகப்பட்ட நலத்திட்டங்களை அந்த தொகுதிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கி உள்ளது.
இதற்கு காரணம், கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான அமைச்சர்கள்தான்.. கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதல்வரானதும் இந்த முறைதான்.. அதனால், கூடுதல் பலம் கொங்கு மண்டலத்துக்கு கிடைத்துள்ளது. இதனாலேயே, எடப்பாடிக்கு பதிலாக, கொங்குவில் எங்காவது போட்டியிடலாம் என்றுகூட முதல்வர் யோசித்து வந்ததாக சொல்லப்பட்டது.

பாஜக
இப்படிப்பட்ட சூழலில்தான், கூட்டணியில் உள்ள பாஜக, கொங்கு பகுதியில் அதிக சீட்களை கேட்க ஆரம்பித்தது.. இதற்கு அதிமுக தலைமை அவ்வளவாக செவிசாய்க்கவில்லை.. இறுதியில் விஷயம் அமித்ஷா வரை சென்றது.. சசிகலா இல்லாததால், தென்மண்டலங்களில் அதிமுகவுக்கு எந்தவித வாக்கு வங்கியும் பாதிக்காது என்றால், அதிமுகவே தென் மண்டலங்களில் அதிக இடங்களை போட்டியிடுவதானே? பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தை ஒதுக்கலாமே? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

முதல்வர்
அப்போதும் எடப்பாடியார் தரப்பு அசைந்து தரவே இல்லை.. இந்நிலையில் அதே கொங்கு மண்டலத்துக்கு வெறும் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது கோவை தெற்கு மட்டும்தான். அதில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.. எனவே பாஜகவுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் சறுக்கல்தான்.

ராமதாஸ்
அதேபோலதான் பாமகவும்.. இந்த 4 மாதத்தில் வன்னியர் இடஒதுக்கீடு சம்பந்தமாகவே தன்னுடைய முழு கவனத்தையும் குவித்து வைத்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.. அதிமுகவுக்கு வன்னியர்கள் வாக்கும் தேவை என்பதால், ராமதாஸை சரிக்கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளானது.. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, கருணாஸ், பிரேமலதா உட்பட பல சமுதாயத்தினர் எதிர்ப்புகளுக்கு நடுவில் வன்னியர் இடஒதுக்கீட்டு தீர்மானமும் இயற்றி, கூட்டணிக்குள்ளம் பாமகவை கொண்டு வந்துவிட்டது அதிமுக தலைமை.

தொகுதிகள்
ஆனால், முக்கிய தொகுதிகளில் பாமகவுக்கு "செக்" வைத்துவிட்டது.. அதாவது ஜெயிக்கவே முடியாத பல தொகுதிகளை அதிமுக பாமகவிடம் ஒதுக்கி உள்ளது.. வடமாநிலங்களில் வலுவாக உள்ள பாமகவுக்கு கொஞ்சமே சம்பந்தமே இல்லாத தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ளன.. சேப்பாக்கத்துக்கும் பாமகவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த தொகுதியும் பாமகவுக்கு கிடைத்துள்ளது.

பேலன்ஸ்
கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, தென் மண்டலங்களில் பாமகவுக்கு ஓரிரு தொகுதிகள் தரரப்பட்டன.. ஆனால், பெரும் சறுக்கலை சந்திக்க நேர்ந்தது.. இந்த முறை என்னாகும் என்று தெரியவில்லை.. ஆனால், அதிமுகவின் முக்கிய இடங்களை, இரட்டை இலை சின்னம் உள்ள கோட்டைகளை தன்னிடத்திலேயே அதிமுக கெட்டியாக தக்க வைத்து கொண்டுள்ளது.. ஆக மொத்தம், முக்கிய தலைவர்களையும் விட்டுத்தராமல், பாமக, பாஜக தந்த அழுத்தத்துக்கும் அடிபணியாமல் சூப்பராக பேலன்ஸ் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி!
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச்












Click it and Unblock the Notifications