சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் திருப்பம்.. சல்லி சல்லியாகும் திமுக கணக்குகள். கோட்டையில் மீண்டும் எடப்பாடியார்.. புது சர்வே

எடப்பாடி பழனிசாமியே மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கணிப்புகள் கூறுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: யார் என்ன சொன்னாலும் சரி, மீண்டும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் அதிரடியாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தமிழக அரசியல் களத்தை கிடுகிடுவென கலங்க வைத்து வருகிறது.

நடக்க போகும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் அதிமுக - திமுக கூட்டணி சம பலத்துடன் களம் இறங்கி உள்ளன.. இதற்கு முன்பு கூட பல தேர்தல் கணிப்புகள் வெளியாகின.. அந்த கணிப்புபடி இருகட்சிகளுக்கும் மாறி மாறி செல்வாக்கு இருப்பதாக சொல்லப்பட்டது.

 டாப் 4 கோடீஸ்வர வேட்பாளர்கள்: அ.தி.மு.க பர்ஸ்ட்; தி.மு.க செகண்ட்.. அட.. கமலும் இதில் இருக்கிறாரே! டாப் 4 கோடீஸ்வர வேட்பாளர்கள்: அ.தி.மு.க பர்ஸ்ட்; தி.மு.க செகண்ட்.. அட.. கமலும் இதில் இருக்கிறாரே!

ஆனால், தற்போது, மற்றொரு கருத்து கணிப்பு அதிமுகவே மீண்டும் வெல்லும் என்று அறுதியிட்டு கூறியுள்ளது.. ஜனநாயக கூட்டமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் என்ற தன்னார்வ அமைப்பு 2011 முதல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது...

 அமைப்பு

அமைப்பு

2016ம் ஆண்டு கருத்து கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டதன் மூலம் இந்த அமைப்பின் கருத்து கணிப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் அமைப்பு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. சர்வே முடிவுகள் மண்டலங்கள் வாரியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இதன்படி, கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் திமுக கூட்டணி 28 இடங்களை கைப்பற்றும் என்றும், தொண்டை மண்டலத்தில் அதாவது தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் 34 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 24 இடங்களை திமுக கூட்டணியும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாண்டிய மண்டலம்

பாண்டிய மண்டலம்

திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சோழ மண்டலத்தில் அதிமுக கூட்டணி 20 இடங்களையும் திமுக கூட்டணி 21 இடங்களையும் கைப்பற்றும் என்றும் அதே சமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களான பாண்டிய மண்டலத்தில் அதிமுக கூட்டணி 20 இடங்களையும் திமுக கூட்டணி 26 இடங்களையும் கைப்பற்றும் என்றும் அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

 111 இடங்கள்

111 இடங்கள்

மொத்தமாக அதிமுக 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. திமுக தென் தமிழக மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பெற்று 111 இடங்களை கைப்பற்றும் என்றும் இந்த சர்வே தெரிவிக்கிறது.

 வாக்குகள்

வாக்குகள்

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாக பார்ப்பதும் அதிமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதாக அமைந்துள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண உதவித் தொகை, நூறு நாள் வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரித்தது ஆகியவை மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்க ளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

 வன்னியர்கள்

வன்னியர்கள்

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குலவேளார் என்ற பெயர் மாற்றம் ஆகியவை அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளதாகவும் அந்த சர்வே தெரிவிக்கிறது. சர்வேயின் போது கேட்கப்பட்ட கேள்விகளில் பொதுமக்கள், ஜெயலலிதா இறந்த சமயம், கொரோனா தொற்று சமயத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய வேலை வாய்புகளை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை பாராட்டி கருத்துகளை தெரிவித்துள்ளனர். இது அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாகை சூட வழி ஏற்படுத்தி தந்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றது.

தேர்தல்

தேர்தல்

அதேபோல, கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் திமுகவிற்கான நிரந்தர வாக்கு வங்கிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது பலமாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் போல் இல்லாமல் தற்போது திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் தோல்விகளை சந்திக்கும் நிலை உள்ளது.. இது திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.

கமல்

கமல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வரவு திமுக கூட்டணியின் வாக்குகளை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுகவிற்கு செல்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்கிறது. இது தவிர திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறித்துள்ளதை இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய இந்த கருத்து கணிப்பு அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அதிமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் முன்னிலையில் உள்ளதை சுட்டிக் காட்டுகிறது.

English summary
CM Edappadi Palanisamy is likely to become the CM again, says Democracy Network Survey
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X