"இருப்பா.. தாத்தா ஓட்டு போட்டுட்டு வர்றேன்".. அசரடித்த எடப்பாடியார்.. சிலிர்த்து போன சிலுவம்பாளையம்
பேரனுடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
Recommended Video
இன்று நாடே எதிர்பார்த்த சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.. 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால், எல்லாரும் வெயிலுக்கு முன்பாகவே ஓட்டுப்போட ஆர்வம் காட்டினார்கள்.. 8 மணிக்குள் சினிமா பிரமுகர்கள் பெரும்பாலானோர் ஓட்டுப்போட்டனர்..

ஆர்வம்
அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்... வாக்களிக்க கிளம்பி வருவதற்கு முன்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா, அம்மா தவுசாயம்மாளின் ஆகியோரின் போட்டோக்களுக்கு எடப்பாடியார் மரியாதை செலுத்தினார். வாக்களிக்க பூத்துக்கு வரும்போது, தன்னுடைய பேரனை கையில் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்..

தொகுதி
எடப்பாடி தொகுதியில் எப்போது வாக்களிக்க சென்றாலும், வாக்கு செலுத்துவதற்காக வரிசையில் வந்து நிற்பார் எடப்பாடி பழனிசாமி.. இந்த முறையும் அப்படித்தான், வந்து நின்றார்.. அப்போது, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.. எப்போதும் போல, எடப்பாடி பழனிசாமி பளிச்சென வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தார்.. நெற்றியில் அதே விபூதி பளிச்சிட்டது. அதேபோல, பேரனையும் அழகாக டிரஸ் பண்ணி தன்னுடன் அழைத்து வந்திருந்தார்..

கடமை
ஒருகையில் பேரனை தூக்கி வைத்து கொண்டே, வாக்களிக்கும் இயந்திரத்தில் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எல்லாரும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும்... தவறாமல் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்" என்றார்.

வைரல்
இதற்கு முன்புகூட எடப்பாடியில் எத்தனையோ முறை முதல்வர் ஓட்டுப்போட்டுள்ளார்.. அப்போதெல்லாம் தனியாகத்தான் வந்தார். வரிசையில் நின்றும் ஓட்டு போட்டுள்ளார்.. இந்த முறை பேரனை தூக்கி வைத்து கொண்டு ஓட்டுப்போட்ட சம்பவமும், வீடியோவும் செம வைரலாகி வருகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications