எல்லாமே ஸ்டாலின் சொன்னது தான்.. ஆனால் ஒரே பந்தில் சிக்ஸர் அடித்து தூக்கியது என்னவோ எடப்பாடி தான்.
ஒரே அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டி உள்ளார்
சென்னை: ஒரே பந்தில் சிக்ஸர் அடித்து தூக்கிவிட்டார் எடப்பாடியார்.. தமிழக மக்களின் நலனை முழுக்க முழுக்க கருத்தில் கொண்டு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. இது மிகப்பெரிய சிக்கலை திமுகவுக்கு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2 வருடமாகவே முதல்வரின் செயல்பாடுகள் பெரிதும் வரவேற்பை பெற்று வந்தது.. ஆனால் கொரோனா உச்சத்தில் இருந்தபோது நிஜமாகவே அதிமுக அரசு தடுமாறிவிட்டது.
3 நாளில் கொரோனா ஒழியும் என்பது முதல், கோயம்பேடு விவகாரம், டாஸ்மாக் திறப்பு என்பது வரை குழப்பம் மேல் குழப்பம் விளைவித்தது.. சரியான திட்டமிடல் இல்லை.. முறையான அறிவிப்புகள் இல்லை, தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது போன்ற எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தன.

பெரிய மைனஸ்
தினமும் எதிர்க்கட்சி தலைவர் குறைகளை சுட்டிக்காட்டி, கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தபடியே இருந்தார். அதிலும் இந்த இ-பாஸ் நடைமுறை அதிமுகவுக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.. தமிழக மக்கள் ரொம்பவே திணறி போனார்கள்.. மத்திய அரசே அனுமதித்தும் ஏன் தமிழக அரசு இ-பாஸை ரத்து செய்ய மறுக்கிறது என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுந்தது... ஆனால், அத்தனையையும் ஒரே அறிவிப்பில் நொறுக்கிவிட்டார் எடப்பாடியார்.

ரத்து அறிவிப்புகள்
இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவது மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. அதேபோல, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் முதல், ஹோட்டல்கள் திறப்பு வரை மொத்தத்துக்கும் அனுமதி என்ற அறிவிப்பால் மொத்த தமிழ்நாடும் திக்குமுக்காடி போயுள்ளது உண்மையே!

அதிமுக
தேர்தல் நெருங்கும் சமயத்தில், கூட்டணிகள் அமையும் நேரத்தில், அதிமுகவுக்கு அவ்வளவும் சாதகமாகவே அமைந்துள்ளது.. அவ்வளவும் வாக்குகளாக மாற்ற இனி ஆளும் தரப்பு நிச்சயம் களமிறங்கவே செய்யும்.. இருந்தாலும் எல்லா ஊருக்கும் பஸ் இல்லாமல், கார், வேன்களை பிடித்து செல்வது சாத்தியமா? எல்லார் கையிலும் அதற்கு காசு இருக்குமா? என்பதும் கேள்விக்குறிதான். என்றாலும். அதேசமயம், இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பார்ப்பு
எந்த மாதிரியான விமர்சனங்களை திமுக மீது வைத்து, இனி அரசியலை நகர்த்த போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.."திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது" என்று உதயநிதி ஸ்டாலின் ஒரு விளக்கம் தந்திருந்த நிலையில், இப்போது அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

கூட்டங்கள்
ஆனால், அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது திமுகவுக்கு பெரிய மைனஸாக அமையும்.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் திமுக தலைவருக்கு உள்ள நிலையில், தன் கட்சி சம்பந்தப்பட்ட கருத்தையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும், குறைகளையும், இனியும் அறிக்கை வாயிலாகவே தெரிவிக்கும் நிலைதான் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. இப்படி சூழலில் பிகேவின் வியூகமும் இனி எப்படி இருக்கும் என்பதும் பெரிய எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்!

முதல்வர் எடப்பாடியார்
சமீபகாலமாகவே, முதல்வரின் புரோகிராம், பிரஸ்மீட் கட்சி கூட்டம், எல்லாத்தையும் பிளான் செய்வது சுனில் டீம்தான் என்பது கிசுகிசுக்கப்பட்டு வந்தது... அதாவது, பிரசாந்த கிஷோர் என்னவெல்லாம் செய்து அதிமுகவை வீழ்த்த நினைத்தாரோ அவை அத்தனையையும் தனி ஒரு நபராக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.

உதயநிதி
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைக்க வைக்க அதை முதல்வர் நிறைவேற்றி வருவதாக தற்போது திமுக தன் தரப்பில் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கூட இது தொடர்பாக ஒரு அதிரடி டிவீட் போட்டுள்ளார். அதில் "தளபதி சொல்கிறார்.. முதல்வர் எடப்பாடி செய்கிறார்" என்று அதிரடியாக கூறியுள்ளார். எனவே இனி வரும் அரசியல் நகர்வுகள் ஆவலை கூட்டிகொண்டே வருகிறது!
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications