ஆடிப்போன உளவுத்துறை.. ஸ்டாலின் போட்ட போடு.. 2 டாப் அதிகாரிகள் மாற்றம்.. களமிறங்கிய மாஸ்டர்மைண்ட்ஸ்
சென்னை: தமிழ்நாட்டின் உளவுத்துறையில் திடீரென முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் நடக்க போகும் பெரிய மாற்றத்திற்கான முன்னோட்டம் இது என்று தமிழ்நாடு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எழுந்துள்ளதாக எதிர்கட்சிகள் புகார்களை வைத்து வருகின்றன. பல்வேறு பகுதிகளில் சட்டென அதிகரித்த கொலைகள் இதற்கு ஒரு காரணம். அதோடு இல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய அளவில் மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் விமர்சனம்; அரசின் உளவுத்துறையின் தோல்வியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த மரணத்தின் போது உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. எப்படி அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்கும். உளவுத்துறை அங்கே சொதப்பியது. எப்படி உங்களுக்கு தகவல் கிடைக்காமல் போனது.
அல்லது தகவல் கிடைத்தும் அதில் ஏன் ஆக்சன் எடுக்கவில்லை. அரசுக்கு இது பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதே. இப்படி இருந்திருக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கடிந்து கொண்டுள்ளார்.
போலீஸ் அனுமதி: பொதுவாக இது போன்ற விஷயங்கள் உள்ளூர் போலீஸ் அனுமதி இன்றி நடக்காது. உள்ளூர் அளவில் போலீஸ் அதிகாரிகள் ஆதரவு தேவை. அது மட்டுமின்றி.. மேலிடத்தில் உளவுத்துறைக்கு இது தெரியாமல் இருந்திருக்காது.
அதை எல்லாம் மீறி இப்படி நடக்கிறது என்றால் எங்கேயோ பெரிய ஓட்டை இருக்கிறது. அரசியல் ரீதியாக எதோ நடந்து உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சந்தேகப்படுகிறாராம்.
மாற்றம்; இதன் காரணமாக வரும் நாட்களில் மொத்தமாக தமிழ்நாடு உளவுத்துறையை மாற்ற முடிவு செய்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வரப்போகிறாராம். அந்த வகையில் 2 மாஸ்டர்மைண்ட் அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளுக்கு ஸ்டாலின் மாற்றி உள்ளார்.
தமிழ்நாட்டின் உளவுத்துறையில் திடீரென முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் நடக்க போகும் பெரிய மாற்றத்திற்கான முன்னோட்டம் இது என்று தமிழ்நாடு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
உளவுத்துறையில் முக்கிய மாற்றம்: 1. சென்னை பெருநகர காவல் உளவுத்துறை பிரிவு 1ன் துணை ஆணையர் அரவிந்த், திருச்சி தலைமையிட துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை பெருநகர காவல், சட்டம் ஒழுங்கு பிரிவு (கிழக்கு) இணை ஆணையர் தர்மராஜன், உளவுத்துறை பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். . துணை ஆணையர் அந்தஸ்தில் இருந்த உளவுத்துறை பிரிவு 1, இணை ஆணையர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது
ஸ்டாலின் அறிக்கை: இதோடு இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறையிடம் சில முக்கியமான அறிக்கைகளையும் கேட்டு உள்ளார்.
அதன்படி கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக அரசுக்கு எவ்வளவு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் சறுக்கல்கள் எங்கே. அரசியல் ரீதியாக எடப்பாடி இதில் எப்படி செயல்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் தலையீடு உள்ளது. அரசியல் ரீதியாக அவரின் வருகை எப்படி உள்ளது என்றெல்லாம் ரிப்போர்ட் வாங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
இது தொடர்பாக முக்கிய உத்தரவுகளை உளவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications