சாதனை படைத்த சந்திரயான் 3! வெற்றிக்கு வித்திட்ட வீரமுத்துவேலுக்கு கலாம் விருது.. முதலமைச்சர் கவுரவம்
சென்னை: சந்திரயான் 3 விண்வெளி துறையில் உலக சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
விருது: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வியாழக்கிழமை காலை ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் டாக்டர் அப்துல் கலாம் விருதினை தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநருமான வீரமுத்துவேலுவுக்கு வழங்கினார்.

சந்திரயான் 3: விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.
வெற்றி: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அதுவரை இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்த்த உலகம், இந்த வெற்றிக்கு பின்னர் அதன் பார்வையை மாற்றிக்கொண்டது.
நிலவில் ஆய்வு: ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.
புதிய கண்டுபிடிப்பு: அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமாண்ட் அதிகம்.
இறப்பு: சல்பரும் வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் நிலவை காலணிப்படுத்த முயலும் போது இந்த தனிமங்கள் நிச்சயம் பயன்படும். இதையெல்லாம் கண்டுபிடித்து சொன்ன பின்னர் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உறக்க நிலைக்கு சென்றன. நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும். எனவே உறக்க நிலைக்கு சென்ற ரோவரை மீண்டும் எழுப்ப முடியாமல் போனது.
சாதனை: இருப்பினும் சந்திரயான் 3 விண்கலன் 2023ம் ஆண்டு செய்த சாதனை, விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு என தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த சாதனையை பாராட்டி சர்வதேச அமைப்புகள் இஸ்ரோவுக்கு விருதை அறிவித்திருந்தன. அதேபோல பல நாடுகள் அடுத்த மிஷினில் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்தன.
மத்திய அரசு விருது: இப்படி இருக்கையில், சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்' விருதை அறிவித்திருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் சிறந்து விளங்க ஊக்குவிக்கவும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பொது விழிப்புணர்வையும் பாராட்டையும் ஊக்குவிக்கவும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து, மாநில அரசு அப்துல் கலாம் விருதை சந்திரயான் 3 வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications